முதுமலையில் யானை சவாரி ரத்து சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதுமலையில் யானை சவாரி ரத்து சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கூடலுார்: முதுமலையில் யானை சவாரி ரத்து செய்யப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.கூடலுார், முதுமலை புலிகள் காப்பகம் பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக இடைவெளியின்றி பருவமழை தொடர்கிறது. இதன் காரணமாக, நிலத்தடி நீர் உயர்ந்து, நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.மழையின் காரணாக, முதுமலையில் கடந்த ஒரு வாரமாக, சுற்றுலா பயணிகளுக்கான யானை சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், யானை சவாரி எதிர்பார்த்து வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.பெங்களூரு சுற்றுலா வாகன ஓட்டுனர் செல்வகுமார் கூறுகையில்,''வட மாநில சுற்றுலா பயணிகள், முதுமலைக்கு யானை சவாரியை எதிர்பார்த்து வருகின்றனர். மழையுடன் மிதமான காலநிலையில், யானை சவாரி செய்வது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும். இந்நிலையில், யானை சவாரி ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றம் அளிக்கிறது. மழையின் போது, பாதுகாப்பான மாற்றுப் பாதையில், யானை சவாரிக்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.வனத்துறையினர் கூறுகையில்,'பருவமழை துவங்கியுள்ளதால், மண்ணில் ஈரதன்மை அதிமாக உள்ளது. அதில், யானைகள் நடந்து செல்லும் போது, வழுக்கி விழும் அபாயம் உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. இதன் காரணமாக, மழையின் போது, சுற்றுலா பயணிகளுக்கான யானை சவாரி தற்காலிமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது வழக்கமான நடவடிக்கைதான், வனப்பகுதியில் மண்ணின் ஈர தன்மை மாறினால் யானை சவாரி தொடரும்,' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை