குப்பை அகற்றாததால் பாதிப்பு பாதுகாப்பு நடவடிக்கை தேவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை அகற்றாததால் பாதிப்பு பாதுகாப்பு நடவடிக்கை தேவை

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோத்தகிரி: கோத்தகிரி கட்டபெட்டு பஜார் பகுதியில் குவிந்துள்ள குப்பையால், பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.கோத்தகிரி நடுஹட்டி, ஜெகதளா மற்றும் கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பஜார் பகுதியில், உள்ள குடியிருப்புகளில் அன்றாடம் வெளியேறும் குப்பை, இறைச்சி கழிவுகள் சாலையோரத்தில் கொட்டப்படுகிறது. இவ்வாறு, கொட்டப்பட்டுள்ள குப்பை அவ்வப்போது அகற்றப்படாமல், தேங்கிக் கிடப்பதால், துர்நாற்றம் வீசி, கொசுத்தொல்லை அதிகரித்து, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.அதில், இறைச்சி கழிவுகளை, காக்கைகள் கிளறி எடுத்து செல்வதால், குடியிருப்புகளின் கூரை மற்றும் சாலைகளில், இறைச்சி கழிவுகள் சிதறி துர்நாற்றம் வீசுகிறது.எனவே,கக்குச்சி ஊராட்சி நிர்வாகம், குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதுடன், நோய் தொற்றாமல் இருக்க, 'பிளீச்சிங் பவுடர்' போட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை