மரம் விழுந்ததில் பால்வாடி கூரை சேதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரம் விழுந்ததில் பால்வாடி கூரை சேதம்

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊட்டி: ஊட்டி முத்தோரை பகுதியில் இயங்கிவரும் பால்வாடி மீது மரம் விழுந்ததில், மேற்கூரை சேதமடைந்தது.ஊட்டி முத்தோரை பகுதியில், தொட்டபெட்டா ஊராட்சிக்கு உட்பட்ட, பால்வாடி அமைந்துள்ளது. இங்கு, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் பெய்த கனமழையில், பால்வாடி அருகே இருந்த மரம் விழுந்தது.இதில், கட்டடத்தின் மேற்கூரை சேமடைந்து, ஓடுகள் உடைந்தன. மரம் விழுந்த நாளன்று, விடுமுறையாக இருந்ததால், பால்வாடியில் இருந்த குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.பெற்றோர் கூறுகையில், 'நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால், ஆங்காங்கு மரங்கள் விழுந்து வருகின்றன. இதனால், குழந்தைகள் தங்கும் பால்வாடி வளாகத்தில், அபாயகரமான மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்,' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை