மழையால் குளமான தென்னந்தோப்புகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் குளமான தென்னந்தோப்புகள்

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில் கன மழை பெய்வதால், விவசாய நிலங்களில் தண்ணீர் வடியாமல் தேங்கியுள்ளது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தின் வடமேற்கு, கிணத்துக்கடவின் மேற்கு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை இடைவிடாமல் பெய்கிறது.இதனால், தாழ்வான பகுதிகள் மற்றும் சமதள பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. வறட்சியால் காய்ந்து கிடந்த விவசாய விளைநிலங்களில் இரு வாரங்களாக தண்ணீர் தேங்கி நிற்கிறது.சிங்கையன்புதுார் அடுத்துள்ள, மூலக்கடை பகுதியில், தென்னந்தோப்புகளில், கடந்த மூன்று நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்கிறது.ஒரு வாரத்துக்குள் மழை நீர் வடியாவிட்டால், இளம் தென்னங்கன்றுகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.விவசாயிகள் கூறுகையில், 'தென்மேற்கு பருவமழை துவங்கியதில் இருந்து, தொடர்ந்து பெய்கிறது. கடந்த, 11ம் தேதி காலை வரை, 33 மி.மீ., 12ம் தேதி 35 மி.மீ., 13ம் தேதி 57 மி.மீ., நேற்று காலை வரை, 22 மி.மீ., மழை பெய்துள்ளது.தென்னந்தோப்புகளில் மழைநீரை வடித்து தடுப்பணைகளில் தேக்கவேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை