கடுங்குளிரால், 'ஸ்வெட்டர்' விற்பனை ஜோர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடுங்குளிரால், 'ஸ்வெட்டர்' விற்பனை ஜோர்

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வால்பாறை ; வால்பாறையில் தொடர் மழை பெய்யும் நிலையில், கடும் குளிர் நிலவுவதால், 'ஸ்வெட்டர்' விற்பனை தீவிரமடைந்துள்ளது.வால்பாறையில் இந்த ஆண்டு கோடை மழையை தொடர்ந்து, தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக இடைவிடாது, கனமழை பெய்கிறது.காற்றுடன் மழை பெய்வதால் குளிர் நிலவுகிறது. இரவு நேரத்தில் கடும் குளிர் நிலவுவதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.எஸ்டேட் தொழிலாளர்கள் காலுக்கு, 'ஷூ' அணிந்தும், கைகளுக்கு உறை, உடலில்,'ஸ்வெட்டர்' அணிந்தும் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குளிரில் இருந்து தங்களை பாதுகாக்க குழந்தைகள் முதல் முதியவர்வரை அனைவரும், 'ஸ்வெட்டர்' அணிந்து தான் வெளியில் செல்ல வேண்டியுள்ளது.இதனால், வால்பாறை நகரில் உள்ள கடைகளிலும், சாலையோரத்தில் நேபாள வியாபாரிகளின், 'ஸ்வெட்டர்'விற்பனை தீவிரமடைந்துள்ளது. மக்களும் தேவைக்கேற்ப,'ஸ்வெட்டர்' வாங்கி செல்கின்றனர்.இரவு நேரத்தில், வால்பாறையில் வசிக்கும் மக்கள் கட்டாயம், 'ஸ்வெட்டர்' அணிந்து உடல் உஷ்ணத்தை பராமரிக்க வேண்டும் என, சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை