போலீஸ் ஸ்டேஷனில் நூலகம் வாசிப்பை ஊக்குவிக்க திட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷனில் நூலகம் வாசிப்பை ஊக்குவிக்க திட்டம்

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பொள்ளாச்சி: பொள்ளாச்சி போலீஸ் ஸ்டேஷனில் பொதுமக்களின் நேரத்தை பயனுள்ளதாக மாற்றும் நோக்கில் நுாலகம் அமைக்கப்பட்டு, திறப்பு விழா நடந்தது.பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளுக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கின்றனர். அங்கு, காத்திருக்கும் பொதுமக்களின் நேரத்தை பயனுள்ளதாக மாற்ற, கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் நுாலகம் அமைக்கும் திட்டம் கடந்த மாதம் கோவை எஸ்.பி., அலுவலகத்தில் துவங்கப்பட்டது.'காவல் நிலையம் தோறும் நுாலகம்' திட்டம் ரோட்டரி சங்கங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.பொள்ளாச்சியில் மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் ரோட்டரி சங்கத்தின் உதவியுடன் நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. நுாலகத் திறப்பு விழா நடந்தது. விழாவில் டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.நுாலகத்தில், பொது அறிவு, இலக்கியம், சட்டம், போலீஸ் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான நுால்கள் வைக்கப்பட்டுள்ளன.டி.எஸ்.பி., கூறுகையில், ''இதே போன்று, பொள்ளாச்சி சரகத்துக்கு உட்பட்ட அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் படிப்படியாக நுாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் நுாலகம் அமைத்து, புத்தகங்கள் வைக்கப்படும். இதன் மூலம் பொதுமக்களிடையே வாசிக்கும்பழக்கம் ஊக்குவிக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X