பருவமழை எதிரொலியால் கொப்பரை விலை உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பருவமழை எதிரொலியால் கொப்பரை விலை உயர்வு

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பொள்ளாச்சி: வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்தில், கொப்பரை கிலோவுக்கு, 115.50 ரூபாய் விலை கிடைத்தது.வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் அன்பரசி முன்னிலையில் ஏலம் நடந்தது.ஏலத்தில், வடக்கிபாளையம், புரவிபாளையம், சூலக்கல், எஸ்.மேட்டுப்பாளையம் பகுதி விவசாயிகள், 63 மூட்டை கொப்பரை கொண்டு வந்தனர்.இதில், 42 மூட்டைகளில் இருந்த முதல் தர கொப்பரை கிலோ, 108.10 முதல், 115.50 ரூபாய் வரை விற்பனையானது.21 மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட, இரண்டாம் தர கொப்பரை கிலோ, 70.10 முதல், 100.10 ரூபாய்க்குவிற்பனையானது.ஏலத்தில், 32 விவசாயிகளும், ஒன்பது வியாபாரிகளும் பங்கேற்றனர். தென்மேற்கு பருவமழையால், கொப்பரை உற்பத்தி பாதித்துள்ளது. ஏலத்துக்கு குறைந்தளவே கொப்பரை வரத்து இருந்தது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், கிலோவுக்கு ஐந்து ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை