பைனான்சியர் கொலை வழக்கு ஆனைமலையில் இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைனான்சியர் கொலை வழக்கு ஆனைமலையில் இருவர் கைது

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆனைமலை: பொள்ளாச்சி வடுகபாளையத்தைச் சேர்ந்தபைனான்சியர் கந்தசாமி, கடந்த, 11ல் சிங்காநல்லுார், 'பம்ப் ஹவுஸ்' புதரில் சடலமாக மீட்கப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக செந்தில்வேல், கிருஷ்ணகுமார் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.ஆனைமலை போலீசார் கூறியதாவது:பிரேதம் மீட்கப்பட்ட இடத்துக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது.கண்கணிப்பு கேமரா காட்சிகளில், பொள்ளாச்சி- கோவை ரோட்டில் நல்லப்பா தியேட்டர் அருகில், மில் வளாகத்திலுள்ள ஒர்க் ஷாப்பில் இருந்து, வரும் கார் சிங்காநல்லுார் ரோட்டில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.சம்பந்தப்பட்ட ஒர்க்ஷாப் உரிமையாளர் சோமந்துறைசித்துாரைச் சேர்ந்த செந்திவேல், 44, அங்கு மெக்கானிக்காக வேலை பார்க்கும் மஞ்சநாயக்கனுாரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், 22, ஆகியோரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால், இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.கந்தசாமியிடம், 30 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்ற செந்தில்வேல், திருப்பி செலுத்த இழுத்தடித்துள்ளார். கடந்த, 10ம் தேதி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.செந்தில்வேல், இரும்பு கம்பியால் தலையில் தாக்கியுள்ளார். கந்தசாமி இறந்தார். இவரின் ஸ்கூட்டரை மெக்கானிக் கிருஷ்ணகுமார் எடுத்துச் சென்று, பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் நிறுத்தியுள்ளார். அதன்பின், சிங்காநல்லுார் 'பம்ப் ஹவுஸ்' ரோட்டோரத்தில் வீசியுள்ளனர். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை