ரூ.82 லட்சத்தில் ரோடு விரிவாக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.82 லட்சத்தில் ரோடு விரிவாக்கம்

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே, பாறைக்குழிக்குள் தடுப்புச்சுவர் அமைத்து, 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வடபுதுார் ரோடு விரிவாக்கம் செய்யப்படுகிறது.கிணத்துக்கடவு ஒன்றியத்தில், கிராமங்களுக்கு இடையே இணைப்பு சாலைகள், சாலை புதுப்பிப்பு மற்றும் புது ரோடு அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கிணத்துக்கடவு அடுத்துள்ள வடபுதுார் - சிங்கையன்புதுார் பிரிவு வரையிலான, மூன்று கி.மீ., துாரமுள்ள மண் ரோடு தார் ரோடாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்காக, 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் பணிகள் துவங்கியது.முதல்கட்டமாக, ரோடு அகலப்படுத்தும் பணி நடக்கிறது. அதற்காக, சிங்கையன்புதுார் - வடபுதுார் பிரிவு அருகே, பாறை குழிக்குள், கான்கிரீட் தடுப்புச்சுவர் எழுப்பும் பணி நடக்கிறது.இதனை தொடர்ந்து, நான்கு சிறு பாலங்கள் அமைக்கப்பட்டு, அதன் பின் தார் ரோடு அமைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை