கிராம சேவை மையத்துக்கு ரூ.3.75 லட்சத்தில் சுற்றுச்சுவர் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிராம சேவை மையத்துக்கு ரூ.3.75 லட்சத்தில் சுற்றுச்சுவர்

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ஒன்றியம், பனப்பட்டியில் கிராம சேவை மைய கட்டடத்துக்கு, 3.75 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது.கிராம ஊராட்சிகளில், 14 லட்சம் ரூபாய் செலவில், கிராம சேவை மைய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. பல ஊராட்சிகளில், அக்கட்டடங்கள் இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளன.ஒரு சில ஊராட்சிகளில், சேவை மையத்தின் வெளிப்பகுதி, பொதுமக்களின் பொழுது போக்கு இடமாகவும், புதர் மண்டியும், பொதுக்கழிப்பிடமாகவும், திறந்தவெளி 'பார்' ஆகவும் மாறியுள்ளன. பனப்பட்டி ஊராட்சி சேவை மையத்திலும் இதே பிரச்னைகள் நிலவுகிறது.இதனை தவிர்க்க, சேவை மைய கட்டடத்தை சுற்றிலும், பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணி நடக்கிறது. இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'சேவை மையத்தின் முன்பகுதியில், மது குடிப்பதுடன், திறந்தவெளியை பொதுக்கழிப்பிடமாக பயன்படுத்துவதை தவிர்க்க, 3.75 லட்சம் ரூபாய் செலவில், கிராம சேவை மையத்தில் சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது,' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை