நிலுவைத்தொகைக்கான பேச்சுவார்த்தை தோல்வி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிலுவைத்தொகைக்கான பேச்சுவார்த்தை தோல்வி

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

வால்பாறை: தேயிலை தொழிலாளர்களின் சம்பள நிலுவை தொகை வழங்குவது குறித்து, கோவையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.வால்பாறையில் கடந்த, 2002ம் ஆண்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக, 76.85 வழங்கப்பட்டது.தேயிலை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறி எஸ்டேட் நிர்வாகங்கள் சம்பளத்தை குறைத்து, 72 ரூபாயாக வழங்கியது. இதனிடையே, தொழிலாளர்களுக்கு சட்ட பூர்வமாக வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், தொழிலாளர்களுக்கு நிலுவைத்தொகை வழங்குவது குறித்து, கோவையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. தோட்ட தொழில் அதிபர்கள் சங்கத்தின் சட்ட ஆலோசகர் ராம்குமார், சங்க செயலாளர் பிரதீப்குமார், துணைத்தலைவர் பாலசந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தொழிற்சங்கம் சார்பில் அமீது (ஏ.டி.பி.,), சுந்தர்ராஜன், செல்லமுத்து (தி.மு.க.,), மோகன் (ஏ.ஐ.டி.யு.சி.,), கருப்பையா (ஐ.என்.டி.யு.சி.,) உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில், கடந்த 2002 - 2005 வரையில் குறைக்கப்பட்ட சம்பளத்திற்கான நிலுவைத்தொகையாக, 1,600 ரூபாய் வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், எஸ்டேட் நிர்வாகம் நீலகிரி, வயநாடு பகுதி தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் தான் வழங்கப்பட்டது. அதே தொகையை தான் வால்பாறை தொழிலாளர்களுக்கும் வழங்க முடியும் என்று தெரிவித்தனர்.இதனிடையே, நிலுவைத்தொகை தொடர்பான வழக்கு விசாரணை சென்னை சிறப்பு தீர்ப்பாயத்தில் வரும், 20ம் தேதி நடைபெற உள்ளதால், பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இதனால், தோட்ட தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X