மாவட்ட ரோடுகளில்,'கேன்ட்ரி போர்டு'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட ரோடுகளில்,'கேன்ட்ரி போர்டு'

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நெடுஞ்சாலை கோட்டத்துக்கு உட்பட்ட முக்கிய சாலை சந்திப்புகளில், வாகன ஓட்டுனர்களுக்காக, 'கேன்ட்ரி போர்டு' எனும் வழிகாட்டும் பலகை அமைக்கும் பணி துவங்கியுள்ளது.பொள்ளாச்சி நெடுஞ்சாலை கோட்டத்தில் உள்ள அனைத்து, இதர மாவட்டச் சாலைகளையும் விரிவுபடுத்தும் பணி நடக்கிறது. இதர மாவட்ட சாலைகள், 3.75 மீட்டரில் இருந்து, 5.5 மீ., அகலத்துக்கு விரிவுபடுத்தப்படுகின்றன.விரிவுபடுத்தப்படும் ரோடுகளில் இரு பக்கமும், மைய பகுதியிலும் வெள்ளை கோடுகள் வரைவது, 'ரிப்ளக்டர்கள்' பதிப்பது, அறிவிப்பு பலகைகள், எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்படுகிறது.பொள்ளாச்சி கோட்டத்திலேயே, 20 கி.மீ., நீளமுள்ள இதர மாவட்ட சாலையான, நெகமம் - எரிசனம்பட்டி ரோட்டில் முக்கிய சந்திப்புகளில் முதன்முறையாக, 'கேன்ட்ரி போர்டு' எனும் வழிகாட்டும் பலகை அமைக்கப்பட்டுள்ளது.இது போன்ற வழிகாட்டி பலகைகள் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநகரங்களில் மட்டுமே அமைக்கப்பட்டு வந்தன. தற்போது, பொள்ளாச்சி பகுதியில் உள்ள கிராம ரோடுகளில் அமைக்கப்படுகிறது.நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'வாகன ஓட்டுனர்கள் வழித்தடம், தொலைவு அறிந்து கொள்வதற்கு வசதியாக, 'கேன்ட்ரி போர்டுகள்' அமைக்கிறோம்.நகரப்பகுதிகளில் உள்ள அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் விரைவில் இதேபோன்று அமைக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X