காலி பணியிடங்களை நிரப்புவதில் இழுபறி , ஊராட்சிகளில் அடிப்படை பணிகள் பாதிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காலி பணியிடங்களை நிரப்புவதில் இழுபறி , ஊராட்சிகளில் அடிப்படை பணிகள் பாதிப்பு

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

உடுமலை: ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதில் அரசு தாமதப்படுத்துவதால், கிராம ஊராட்சிகளின் நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது.உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. இதில் 8 ஊராட்சிகளில், செயலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. உள்ளாட்சி தேர்தல் தடைப்பட்டதால், கிராமங்களில் உள்ள அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது உட்பட பல செயல்பாடுகளுக்கு, செயலாளர்களுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் வினியோக கண்காணிப்பு, சுகாதாரம், வரி வசூல் போன்ற பணிகளையும், செயலாளர்களே மேற்கொள்ள வேண்டும்.ஆனால், காலியாக உள்ள செயலாளர் பணியிடங்களால், அந்தந்த ஊராட்சி மக்கள், பலவழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பணியில் இருக்கும் செயலாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையால், அவர்களுக்கான ஊராட்சியையும் கவனிக்க முடியாமல், பொறுப்பாக இருக்கும் கிராமங்களுக்கும், முழுமையாக செயல்பட முடியாமல், அரைகுறையான பணிகள் மட்டுமே நடக்கிறது. ஓராண்டுக்கும் மேலாக பணியிடங்கள் காலியாக உள்ளன.நடப்பு நிதியாண்டு துவங்கியதும் பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப மாநிலம் முழுவதும், அந்தந்த ஒன்றியங்களில் காலியாக உள்ள செயலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. உடுமலையில் மட்டுமே எட்டு பணியிடங்களுக்கு, 600 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பெற்றும், இரண்டு மாதங்களாகி விட்டது.இதனால், மீண்டும் பழைய நிலையே தொடரும் என மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அரசு, ஒவ்வொரு முறையும், ஊராட்சி செயலாளர் பணியிடம் நிரப்புவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு அதோடு நிறுத்திவிடுவதால், நம்பிக்கை இழந்துவிட்டனர்.இம்முறையும், விண்ணப்பங்கள் பெறப்பட்ட பின்னர், கடந்த மாத இறுதியில், விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் நடத்தவும், தீவிரமாக ஒன்றிய நிர்வாகங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், அரசின் உத்தரவு இல்லாததால், நேர்காணல் நடத்தப்படவில்லை. விண்ணப்பங்கள் பெற்றதோடு, பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் முடங்கியுள்ளது.கிராமங்களில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டுமின்றி, செயலாளர்களும் இல்லாததால், நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு விரைவில், காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X