தேயிலை உற்பத்திக்கு கை கொடுத்த பருவமழை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேயிலை உற்பத்திக்கு கை கொடுத்த பருவமழை

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வால்பாறை: வால்பாறையில் பெய்யும் தென்மேற்கு பருவமழை தேயிலை உற்பத்திக்கு கைகொடுத்துள்ளது.வால்பாறையில் தேயிலை தொழில் மட்டுமே பிரதானமாக உள்ளது. இங்குள்ள, 30க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்களில், 25 ஆயிரம் எக்டர் பரப்பில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இது தவிர, சிறிய அளவில் காபி, ஏலம், மிளகு பயிரிடப்பட்டுள்ளன.வால்பாறையில் தயாரிக்கப்படும் தேயிலை துாள், கோவை, கொச்சி, குன்னுார் ஏல மையங்களுக்கு விற்பனைக்கு அனுப்புவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.உலகத்தரம் வாய்ந்த தேயிலை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதால் எஸ்டேட் நிர்வாகங்கள் போட்டி போட்டுக் கொண்டு தரமான தேயிலையை உற்பத்தி செய்வதில் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.இதனிடையே, வால்பாறையில் இந்த ஆண்டு தென்மேற்குப்பருவ மழை தீவிரமாக பெய்வதால், தேயிலை செடிக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளது. இதனால் இந்த ஆண்டில் தேயிலை உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது.தோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் தற்போது பருவமழை தொடர்ந்து பெய்வதால், இந்த ஆண்டு தேயிலை உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. மழை காலத்தில் தேயிலை செடிகளை தாக்கும் கொசுக்களை ஒழிக்க பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கும் பணியும் ஜரூராக நடக்கிறது,' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை