பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு , சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு , சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை: பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.உடுமலை அருகே, மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர், சிற்றாறுகளாக மாறி, பஞ்சலிங்க அருவியுடன் இணைகிறது. அங்கிருந்து பாலாறாக மாறி, திருமூர்த்தி அணையை சென்றடைகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக, அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவதில்லை.வனத்துறையினர் கூறியதாவது: மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி, கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்லாதவாறு, மலை அடிவாரத்திலேயே தடுத்து நிறுப்படுகின்றனர். அருவியில் நீர் வரத்து சீரானால் மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவர். இவ்வாறு, வனத்துறையினர் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை