புகார் வந்தால் நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் வந்தால் நடவடிக்கை

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

'கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் சேரும் மாணவர்களிடம், கூடுதல் கட்டணம் வசூலித்தால், நடவடிக்கை எடுக்கப்படும்,' என, முதன்மை கல்வி அலுவலர் எச்சரித்தார்.கட்டாய கல்வி உரிமை சட்டம் - 2009ன் கீழ், தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, ரசீது இல்லாமல் சில இடங்களில் கட்டணம் பெறப்படுவதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிப்படுவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி கூறியதாவது: கட்டாய கல்வி உரிமைச்சட்ட இட ஒதுக்கீட்டின்படி, பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம், கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது. பஸ் கட்டணம், விடுதி கட்டணம் என கூடுதல் கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார். இருப்பினும், சில பள்ளிகள் மீது, முதன்மை கல்வி அலுவலருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து, விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
-நமது நிருபர்-

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை