செம்மண்ணில் அவரை அபார விளைச்சல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செம்மண்ணில் அவரை அபார விளைச்சல்

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஆனைமலை: ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் பீர்க்கங்காய், பாகற்காய், புடலை உள்ளிட்ட பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்கின்றனர்.ஒன்றிய பகுதி முழுவதும் ஒவ்வொரு ஆண்டும், இரண்டு சீசனாக மொத்தம், 247 ஏக்கருக்கு பந்தல் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. ஜன., முதல் மார்ச் வரை முதல் சீசனாகவும், ஜூன் முதல் ஆக., வரை இரண்டாவது சீசனாகவும் பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்யப்படும். அதுவும், ஜூன் மாதம் துவங்கும் பருவமழையை நம்பியும், கிணறு, ஆழ்குழாய் கிணறு உள்ளிட்ட நீராதாரங்களை பயன்படுத்தியும் சாகுபடி மேற்கொள்ளப்படும்.நடப்பாண்டு, ஜூன் மாதம் சீசன் துவங்கியுள்ள நிலையில், கோட்டூர், ஆனைமலை, ரமணமுதலிபுதுார், சின்னப்பம்பாளையம், வேட்டைக்காரன்புதுார் உள்ளிட்ட பகுதிகளில், பந்தல் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் களமிறங்கி உள்ளனர்.ஆனைமலை - கோட்டூர் ரோட்டில், பெத்தநாயக்கனுார் பிரிவு அருகே விவசாயிகள், சொட்டுநீர் பாசனத்தில் பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்கின்றனர். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்காக சொட்டு நீர் பாசனம் அமைத்து உள்ளனர். விடுபட்டுள்ள விவசாயிகளும் சொட்டுநீர் பாசனம் அமைக்க தோட்டக்கலைத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.தோட்டக்கலை அதிகாரிகள் கூறுகையில், 'பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள், அரசு மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க முன்வர வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மற்றும் இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்துத்தரப்படும்,' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை