மரங்களுக்கு உரமளிக்க புதிய தொழில்நுட்பம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மரங்களுக்கு உரமளிக்க புதிய தொழில்நுட்பம்

Added : ஜூன் 14, 2018
Advertisement

உடுமலை: உடுமலையில், தென்னை மரங்களில் நுண்ணூட்ட சத்துக்கள் பற்றாக்குறைக்கு, வேரூட்ட முறையில் மருத்துகள் வைக்கும் முறையை பின்பற்றி வருகின்றனர்.உடுமலை சுற்றுவட்டாரத்தில், நுண்ணுாட்டச்சத்துகள் குறைபாட்டாலும் மரங்கள் பாதிக்கப்பட்டு, மகசூல் குறைவதால் விவசாயிகள் நஷ்டமடைகின்றனர். சிவப்புக்கூன் வண்டுகள் மரத்தின் தண்டுகளை துளைத்து தாக்குவதால் பாதிப்புகள் வெளியில் தெரிவதில்லை. முழுவதும் பாதிக்கப்பட்டே பின்பே விவசாயிகளுக்கு தெரியவருகிறது. தண்டுப்பகுதிகளை தாக்குவதால் நேரடியாக கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.அதேபோல் தஞ்சாவூர் வாடல் நோய் மற்றும் இலைக்கருகல் நோய்களை கட்டுப்படுத்த நேரடியாக மருந்து தெளித்தால் மட்டுமே பயனளிக்கும். ஆனால், தென்னை மரங்களுக்கு ஒவ்வொன்றுக்காக தெளிக்கமுடியாது. இந்நிலையில், நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேர் வழியாக உரம் மற்றும் மருந்தளித்தல் முறையை பின்பற்ற வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தென்னை மரங்களின் வேர்களில் மருந்துகள் கட்டப்படுவதால் சிவப்பு கூன் வண்டு, தஞ்சாவூர் வாடல் நோய்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்படுகிறது. மட்டுமில்லாமல் நுண்ணுாட்ட சத்துகள் குறைபாட்டுக்கும் வேரூட்ட முறையை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.வேளாண்துறையினர் கூறியதாவது: தென்னை மரத்தின் தண்டுகளை துளைத்து தாக்கும் வண்டுகளை கட்டுப்படுத்தவும், நுண்ணுாட்ட சத்துக்கள் குறைப்பாட்டுக்கும் வேரூட்டம் முறையை சிறப்பான பலனை தரும். இளம்வேர்களை கண்டுபிடித்து கட்டப்படும் மருந்துகளை கிரகித்துக்கொண்டு நோய்தாக்குதலை சிறப்பாக கட்டுப்படுகிறது. நுண்ணுாட்டசத்து குறைபாட்டுக்கு கோவை வேளாண் பல்கலைக்கழகம் கண்டுபிடிக்கப்பட்ட தென்னை டானிக் பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு மரத்துக்கு, 200 மி.லி., வீதம் கட்டினால் போதுமானதாகும். அதேபோல், சிவப்புக்கூன் வண்டு மற்றும் தஞ்சாவூர் வாடல் நோயை கட்டுப்படுத்தவும் மருந்துகள் உள்ளன. வேளாண்துறை அதிகாரிகளின் ஆலோசனையின்படி வேர் வழியாக மருந்து அளிக்கலாம். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை