விளைநிலத்தில் ஈரம்; தக்காளி சாகுபடிக்கு ஆர்வம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விளைநிலத்தில் ஈரம்; தக்காளி சாகுபடிக்கு ஆர்வம்

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

உடுமலை: உடுமலையில், பருவமழையை தொடர்ந்து காய்கறி நாற்றுகள் நடவு செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.உடுமலையில், தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. பருவமழையை எதிர்பார்த்து சாகுபடிக்கு தயாராக நிலங்களை உழவுசெய்து காத்திருந்த, விவசாயிகள் தானியங்கள் விதைப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். பாப்பனுாத்து, பூலாங்கிணறு, வாளவாடி, போடிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறி சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது.பருவமழையின் போது நடவு செய்யப்படும் காய்கறி நாற்றுகள் நன்கு வேர்பிடித்து வளர்வதற்கு வாய்ப்புள்ளதால் விவசாயிகள் காய்கறி சாகுபடிக்கு ஆர்வம் காட்டியுள்ளனர். பெரும்பாலும் குழித்தட்டு முறையில் உற்பத்தி செய்யப்படும் நாற்றுகளையே பயன்படுத்தி வருகின்றனர். இம்முறையில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி நாற்றுகள் நோய்தாக்குதலின்றியும், அதிக முளைப்புத்திறன் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.குழித்தட்டில், தென்னை நார்க்கழிவுகள், குப்பைமண் மற்றும் உயிர்உரங்கள் கலந்த மண் பாதியளவு நிரப்பப்பட்டு, அதன்பின் விதைகள் போடப்பட்டு, அதன் மேலும் மண்கலவை போட்டு மூடப்படுகிறது. ஒருவாரத்தில் முளைக்கும் செடிகள், 21 முதல், 30 நாட்கள் வரை பசுமைக்குடிலில் பாதுகாப்பாக வளர்க்கப்படுகிறது. இதில், விதைகள் முளைப்பு திறன், 90 சதவீதம் உள்ளதாகவும், வேர்கள் பரப்பி காணப்படுவதால் செடிகளின் வளர்ச்சியும், காய்ப்பும் சீராக இருக்கும். இதனால், குழித்தட்டு முறையில் உற்பத்தி செய்யப்படும் நாற்றுகளுக்கு விவசாயிகளிடையே வரவேற்பும் இருந்து வருகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை