பண்ணை குட்டையில் மழைநீர் வேளாண்மைக்கு தரும் சிறப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பண்ணை குட்டையில் மழைநீர் வேளாண்மைக்கு தரும் சிறப்பு

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

உடுமலை: குடிமங்கலத்தில், 'அட்மா' திட்டத்தின் கீழ் தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.வட்டார வேளாண் உதவி இயக்குனர் மகாலிங்கம் தலைமை வகித்து பேசியதாவது: குடிமங்கலம் வட்டாரத்தில், 50 ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாறிவரும் பருவநிலைகளுக்கேற்ப புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றி, உரிய முறையில் இடுபொருட்களை பயன்படுத்தி மகசூல் பெறுவதற்கு தொடர்ந்து வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.மழைநீர் சேமிப்பு என்பதை, அனைத்து விவசாயிகளும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கு, தோட்டங்கள்தோறும் அவரவர், வசதிக்கேற்ப பண்ணைக்குட்டைகள் அமைத்து மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்கலாம். இதனால், நிலத்தடிர் நீர்மட்டம் உயர்ந்து, ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் ஊறுவதற்கு வாய்ப்புள்ளது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு, சொட்டுநீர் பாசன முறையை பின்பற்றலாம். சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு, நுாறு சதவீதமும், பெரிய விவசாயிகளுக்கு, 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. இவ்வாறு பேசினார்.ஆழியாறு, தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ராஜமாணிக்கம், தென்னை சாகுபடிக்கேற்ற மண்வகைகள், ரகங்கள், பண்புகள், மரங்களை தாக்கும் சிவப்புக்கூன் வண்டுகள், காண்டாமிருக வண்டுகள், சுருள் வெள்ளை ஈ, கருந்தலைப்புழு மற்றும் நத்தைப்புழு கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், பென்சில் நோய், இலைக்கருகல், தஞ்சாவூர் வாடல் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்தும், ஊட்டச்சத்து மேலாண்மை முறைகள் பற்றியும் விளக்கினார். தென்னை விவசாயிகள் சங்க தலைவர், மவுனகுருசாமி, உதவி வேளாண் அலுவலர் கோதண்டபாணி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை