மலை கிராம பள்ளியை ஆசிரியர்கள் புறக்கணிப்பு !| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மலை கிராம பள்ளியை ஆசிரியர்கள் புறக்கணிப்பு !

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை: தொடக்க கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில், வால்பாறை அரசுப் பள்ளியில் காலியாக இருந்த ஒருபணியிடத்தை, யாரும் தேர்வு செய்யவில்லை.அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. தொடக்க கல்வித்துறையில், வருவாய் மாவட்டத்திற்குள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான, இடமாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில், 21 பேர் பங்கேற்றனர்.வால்பாறை அரசுப் பள்ளியில், அறிவியல் பாடத்திற்கான காலியிடம் மட்டுமே காண்பிக்கப்பட்டது. இப்பணியிடத்தை யாரும் தேர்வு செய்யவில்லை. மலைகிராம பள்ளிகள் தேர்வு செய்தால், மாற்று ஆசிரியர் இல்லாமல், பணியிட மாறுதல் பெற முடியாததோடு, அலைச்சல் உள்ளிட்ட காரணங்களால், இப்பணியிடத்தை ஆசிரியர்கள் தேர்வு செய்யவில்லை என, கூறப்படுகிறது.இதேபோல், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு, இடமாறுதல் கலந்தாய்வு, ராஜவீதி, துணிவணிகர் மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்தது. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்ததால், இப்பணியிடத்துக்கு கடந்தாண்டே, பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், 36 உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இடமாறுதல் கலந்தாய்வில், 15 பேர் பங்கேற்ற நிலையில், ஏழு தலைமை ஆசிரியர்களே, விரும்பிய இடங்களை தேர்வு செய்தனர். மற்ற பணியிடங்கள், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தும் போது நிரப்பப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X