ஜெ.,க்கு நோய் பாதிப்புகள் அதிகம்: திவாகரன் மகள் Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ.,க்கு நோய் பாதிப்புகள்
அதிகம்: திவாகரன் மகள்

சென்னை : 'இதயம், நுரையீரல், தைராய்டு, நீரிழிவு என, பல நோய் பாதிப்புகளில் சிக்கிய, ஜெயலலிதா போன்ற யாராக இருந்தாலும், மருத்துவ ரீதியாக தேற்றுவது கடினம்' என, ஆணையத்தில், திவாகரன் மகள், டாக்டர் ராஜ்மாதங்கி, தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஜெ.,நோய் பாதிப்புகள்,அதிகம்,திவாகரன் மகள்,A.D.M.K,Divakaran,Jayalalithaa,அ.தி.மு.க,ஜெயலலிதா,திவாகரன்


ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்து வருகிறது. இந்த கமிஷனில், திவாகரனின் மகள், ராஜ்மாதங்கி மற்றும் மருமகன், விக்ரம் ஆகியோர் ஆஜராகினர். இவர்கள் இருவரும், அப்பல்லோ மருத்துமனையில், டாக்டர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இவர்களிடம், ஆணைய வழக்கறிஞர்கள், பார்த்த சாரதி, நிரஞ்சன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது, காது - மூக்கு - தொண்டை டாக்டர், விக்ரம் சில தகவல்களை தெரிவித்து உள்ளார்.

'ஜெ.,க்கு, 2016 அக்., 7ல், 'டிரக்கியஸ்டோமி' என்ற, மூச்சுக்குழல் சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சிகிச்சை அளித்த, பாபு ஆப்ரகாம் தலைமையிலான மருத்துவ குழுவில், நானும் இடம் பெற்றேன்.

'ஜெ.,க்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக, திவாகரனை சந்தித்து பேசவில்லை. 'மேலும், ஜெ.,யை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என, நான் கூறவில்லை' என, டாக்டர் விக்ரம் கூறியதாக, தகவல் வெளியாகி உள்ளது.

பொதுநல மருத்துவர், ராஜ் மாதங்கியிடம் விசாரணை நடந்தது.அப்போது, 'செயற்கை சுவாசம்' தொடர்பாக தெரிந்து கொள்வதற்காக, 2016 செப்., 28ல், ஜெ., என்னை அழைத்தார். அன்று, செயற்கை சுவாசம் தொடர்பாக, சசிகலா, டாக்டர்கள், சிவகுமார், வெங்கடேஷ் ஆகியோரிடம், சம்மதம் பெற்றதாக, மருத்துவ குறிப்பு கூறுகிறது.

'இதயம், நுரையீரல், தைராய்டு, நீரிழிவு நோய் என, ஜெ., சிரமப்பட்டார். 'இதுபோன்று பாதிக்கப் பட்டவர்கள் யாராக இருந்தாலும், மருத்துவ ரீதியாக காப்பாற்றுவது கடினம்' என, ராஜ் மாதங்கி, தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Advertisement

'மாஜி' கமிஷனர் மீண்டும் ஆஜர்!

நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நேற்று மீண்டும் ஆஜராகி, விளக்கம் அளித்தார். 'மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெ.,க்கு, நான்கு அடுக்கு பாதுகாப்பு அளிக்கப் பட்டிருந்தது. மருத்துவமனை வெளியே, மாநகர போலீசாரும், சிகிச்சை பெற்ற தளத்தில், உளவுத்துறை ஐ.ஜி., சத்தியமூர்த்தி மற்றும் துணை கமிஷனர் சுதாகர் தலைமையில் பாதுகாப்பு வழங்கப்பட்டது. 'கூடுதலாக, 'இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பும், ஜெ.,யின் தனி பாதுகாப்பு அதிகாரிகளும், பாதுகாப்பு வழங்கினர். இருப்பினும், நான்கு பிரிவினரும் ஒருங்கிணைந்த ஆலோசனை நடத்தவில்லை. 'போயஸ் கார்டனில், வருமான வரி துறையினர் சோதனையின் போது, சசிகலா அறையில், குட்கா ஊழல் தொடர்பாக, டி.ஜி.பி., ராஜேந்திரன், அரசுக்கு எழுதிய கடிதம் கிடைத்தது எனக்கு தெரியாது. பத்திரிக்கைகள் வாயிலாக தெரிந்து கொண்டேன்' என, ஆணையத்தில், ஜார்ஜ் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஜூன்-201818:44:02 IST Report Abuse

ஆப்புஉண்மையை அறிய வாய்ப்பே இல்லை.

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
15-ஜூன்-201820:41:28 IST Report Abuse

mindum vasanthamஸ்டாலின் செயல் தலைவரான பிறகு , கருணாநிதியின் கேள்வி பதில் அறிக்கை கூட வருவதில்லையே ஏன்...

Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
16-ஜூன்-201817:46:31 IST Report Abuse

Jaya Ramயார் அவரிடம் கேள்விகேட்டார்கள் அவர் பதில் கூறினார், அவரே கேள்வியும் கேட்டு, பதிலும் எழுது வார் அதுதான் கேள்வி பதில் இப்போ அவரால் முடியவில்லை வரவில்லை...

Rate this:
sudharshana - chennai,இந்தியா
15-ஜூன்-201817:49:47 IST Report Abuse

sudharshanaயாரையும் ஏன் குற்றம் சொல்ல வேண்டும் ஜே என்ன படிக்காதவரா.பெரியா கல்லூரி படிப்புகளை விட அதிக ஞானம் உள்ளவர். தன உடல் நிலை நன்னா இருந்தால்தான் சரியாக அரசாங்கம் நடத்த முடியும். அதற்கு முதல் காரியமாக வேண்டாதவர்களை சுத்தமாக அகற்றி விட்டு. நம்பிக்கைக்குரிய டாக்டர் காலை கூட வைத்துக்கொண்டு உடல் நலம் பேணி, சிகிச்சை காலை பற்றியும் தன உடல்நலம் பற்றியும் சரியான விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டிருக்கவும் வேண்டும் செய்யாதது முற்றிலும் அவர் தவறே. அவர் நிலைமையை பயன் படுத்தி க்கொண்டார்கள் அவ்வளவுதான் எல்லாருமே ஒரு மெடிக்கல் ஸ்டுடென்ட் மாதிரி தன உடல் நிலை பற்றி நன்றாக தெரிந்து செயல் படவும் வேண்டும்..

Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
15-ஜூன்-201814:06:32 IST Report Abuse

raghavanஜெ. அவர்கள் கைப்பட எழுதி வைத்திருந்த உணவு பட்டியலில் நீரிழிவு நோயாளிகள் உண்ண கூடாத உணவுகள்தான் பெரும்பாலும் இருந்தன..பேருக்கு கூட சிறு தானிய உணவுகள் உண்டதாக தெரியவில்லை..சுற்றி இருந்தவர்கள், விரைவில் நோய் முற்றவேண்டும் என்றே செயல்பட்டதாக தெரிகிறது.

Rate this:
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
15-ஜூன்-201812:55:25 IST Report Abuse

R.MURALIKRISHNANஇருந்திருந்தால் தமிழகத்திற்கு இந்த நிலை வந்திருக்காது. தடியெடுத்தவனெல்லாம் தண்டக்காரனாயிருக்கவும் முடியாது

Rate this:
christ - chennai,இந்தியா
15-ஜூன்-201810:59:28 IST Report Abuse

christ75 நாட்கள் யாருடைய கண்ணிலும் காட்டவில்லை ? அவர் இறந்த சுவடு மறைவதற்குள் , அவரை அடக்கம் செய்த மண்ணின் ஈரம் காய்வதற்குள் அவர்போலவே கொண்டை , சேலை , நெற்றில் நாமம் ,அவரை போலவே அவரின் காரில் பவனி வருவது , அவசர அவசரமாக முதல்வர் பதவியில் உட்க்கார நினைத்தது இதிலிருந்து தெரிந்து கொள்ளளலாம் ஜெயாவுக்கு ஸ்லோ பாய்சன் மூலமாக இதயம், நுரையீரல், தைராய்டு, நீரிழிவு பாதிப்பு எப்படி வந்து இருக்கும் என்று ?

Rate this:
ramasamy naicken - Hamilton,பெர்முடா
15-ஜூன்-201819:51:16 IST Report Abuse

ramasamy naickenஜெயாவின் உடல் நிலை மூன்று வருடம்களுக்கு மேலே இப்படித்தான் இருந்தது. பயங்கர அதிர்ச்சி அடைய அவள் திடீர் என்று சாகவில்லை. தமிழன்தான் மூளை கேட்டு தண்ணிக்கும் பிரியாணிக்கும் ஆசைப்பட்டு ஒட்டு போட்டுவிட்டு இப்போது பழனிசாமியிடம் மாட்டிக்கொண்டு முழிக்கின்றான்....

Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
15-ஜூன்-201810:23:57 IST Report Abuse

Visu Iyerபிரதமரை விசாரிப்பாங்களா மத்திய உள்துறை அமைச்சரை விசாரிப்பாங்களா.. அதுக்குள்ள எல்லாம் மறந்துடும்னு சொல்றீங்களா... சரி..

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
15-ஜூன்-201809:38:50 IST Report Abuse

balakrishnanஅவருடைய கடந்த காலத்தை உற்று நோக்கினால், அவரின் தினசரி அலுவல்கள், அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள், அவரின் செயல்பாடு அனைத்தையும் கவனித்தால், ஜெ அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டுவிட்டார் என்பது தெரிந்துகொள்ள முடியும்

Rate this:
Rajasekar K D - Kudanthai,இந்தியா
15-ஜூன்-201814:13:47 IST Report Abuse

Rajasekar K Dவிசாரணை ஆணையம் தேவை இல்லை என்பதே என் கருத்து....

Rate this:
15-ஜூன்-201809:32:13 IST Report Abuse

ருத்ராநடித்துக் கொண்டிருக்கும் போது , திரு M G R அவர்களால் கொள்கைச் செயலாளராக இருந்த போது, வராத நோய் உங்கள் குடும்ப கட்டுப்பாட்டில் முதல்வர் வந்த பின் வரிசையாக வந்ததா? நோய்கள். குணமாக்குவதை விட பணமாக்குவதில் மட்டுமே அதிக ஆர்வம் .ஒரு பெண் தனியாக ஜெயிக்க முடியும் என்பது ஜெ..அவர்களுக்கு தெரியாமல் போனது விதி அவரைச்சுற்றி படித்த அரசியல் வித்தகர்கள் ஆலோசகர்கள் இருந்தும் சில தேர்வில் மாபெறும் தவறு செய்து விட்டார். வேதனை.

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
15-ஜூன்-201813:30:15 IST Report Abuse

dandyநோய்கள் வரவழைக்க பட்டது....

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
15-ஜூன்-201814:25:37 IST Report Abuse

Nallavan Nallavan\\\\ திரு M G R அவர்களால் கொள்கைச் செயலாளராக இருந்த போது, வராத நோய் உங்கள் குடும்ப கட்டுப்பாட்டில் முதல்வர் வந்த பின் வரிசையாக வந்ததா? //// யப்பா .... அறிவாளியே .... முடியல .... வயசாயிட்டா ஜெயலலிதா மட்டுமில்ல எந்த மனுசனா இருந்தாலும் பர்மிசன் கேக்காமே வந்து ஒட்டிக்கிறதுதான்யா வியாதி .......

Rate this:
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
15-ஜூன்-201818:05:37 IST Report Abuse

வந்தியதேவன்அதெல்லாம் கிடையாது... அந்தம்மா... யார் பேச்சையும் கேக்கமாட்டாங்க...? மருத்துவர் “அம்மா நீங்கள்... முந்திரியெல்லாம் சாப்பிடக்கூடாது...”...ன்னு சொன்னால்... அப்புறம் எதுக்கு நீ எனக்கு டாக்டரா இருக்க..? அப்படீன்னு கேப்பாங்களாம்...? அந்தம்மா... யாருக்கு கட்டுப்படவும் மாட்டாங்க... கட்டுப்பாடா இருக்க மாட்டாங்க...? அதுனாலதான்.. அந்தம்மாவுக்கு நோய்கள் அதிகம்... பாருங்க ஒருத்தரு 95 வயசு ஆகியும்... எப்போதுமே செய்யும்... தினசரி பணிகள் செய்யலைன்னாகூட... மூணு வேளையும் உண்டு... ஜாலியாக டிவி பார்த்துகிட்டு இருக்காரு... காரணம்... கட்டுப்பாடாவும் இருக்கத் தெரியும்... கட்டுப்பட வைக்கவும் தெரியும் அவருக்கு...?...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-ஜூன்-201809:23:55 IST Report Abuse

Srinivasan Kannaiyaஉடல் நிலையில் சிறிது கவனம் எடுத்து இருக்கலாம்..

Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
15-ஜூன்-201809:17:34 IST Report Abuse

Sanny பொதுவாக 50 வயது தாண்டிவிட்டால் 6 மாதங்களுக்கு ஒருவர் இரத்த பரிசோதனை செய்யணும், அதோடு அவரது வயிற்று புற்று நோய் சம்பந்தமாக இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பரிசோதிக்கணும், பரிசோதனையில் தவறாக Result வந்தால் அந்த நபர் Colonoscopy பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர், இதெல்லாம் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இலவசமாக செய்யலாம், இதை இந்தியாவில் சாதாரண மக்கள் செய்வதுக்கு பல பொருளாதார குறைபாடுகள் இருக்கு, ஆனால் ஒரு மாநில முதல் அமைச்சரால் ஏன் செய்ய முடியாதுபோனது. அவருடன் இருந்த டாக்டர்கள் உட்பட எல்லோருமே வேண்டும் என்று ஜெயலலிதா அம்மையாருக்கு வியாதி வரவைத்து, அதுக்கு சிகிச்சைகள் சரியாக செய்யாமல், மரணிக்கப்பட்டார் என்பதே உண்மை.

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement