நெடுஞ்சாலையில் கால்நடைகள் உலா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலையில் கால்நடைகள் உலா

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊட்டி: ஊட்டி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கால்நடைகளால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.ஊட்டி நகரின் பல்வேறு பகுதிகளிலும் கால்நடைகள் உலா வருவது வழக்கமாகி விட்டது. குறிப்பாக மாடு, குதிரைகள் அதிகளவில், சாலைகளில் திரிகின்றன.இதனால், மக்கள் நடமாடவும் சிரமம் உள்ளது. கால்நடைகள், சாலையிலேயே சாணமிடு வதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. 'கால்நடைகளின் உரிமையாளர்கள், தங்கள் இருப்பிடத்திலேயே அவற்றை வைத்து வளர்க்க வேண்டும்; சாலைகளில் திரிய விடக்கூடாது' என, நகராட்சி சார்பில் பலமுறை அறிவுறுத்தப்பட்டது; ஆனால், பலன் கிடைக்கவில்லை.இந்நிலையில், ஊட்டி- தலைகுந்தா சாலையின் பல்வேறு இடங்களிலும், மாடுகள்; குதிரைகள் அதிகளவில் உலா வருவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்து ஏற்பட்டதால், கால்நடைகளின் உரிமையாளர்கள், வாகன டிரைவர்களிடம் பிரச்னை செய்வதும் ஆங்காங்கே நடக்கிறது.டிரைவர்கள் கூறுகையில், குதிரைகள், மாடுகளின் உரிமையாளர், அவற்றை சாலையில் விடாமல் பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.ஊட்டி நகராட்சி கமிஷனர் ரவி கூறுகையில்,''தெருவில் கால்நடைகளை திரிய விடுவோர், தங்களது கால்நடைகளை அடைத்து வைக்க இடமில்லை எனக் கூறியுள்ளனர். இதற்கு இரு முறை நடவடிக்கை எடுத்தும் பயன் ஏதும் இல்லை. மீண்டும் ஒரு முறை, கால்நடை உரிமையாளர்களை அழைத்து பேசி, உரிய தீர்வு காணப்படும்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை