நீர்த்தேக்க பகுதியில் சுற்றுலா பயணிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீர்த்தேக்க பகுதியில் சுற்றுலா பயணிகள்

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஊட்டி: காமராஜர் சாகர் அணைப்பகுதியில் அத்துமீறும் சுற்றுலா பயணிகளுக்கு, பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.ஊட்டியிலிருந்து கூடலுார் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காமராஜர் சாகர் அணை, பைக்காரா அணை ஆகியவை உள்ளன. பைக்காரா அணையில் சுற்றுலா துறை சார்பில் படகு சவாரி செய்யப்பட்டு வருகிறது.கடந்த கோடை சீசனின் போது, கேரளா, கர்நாடகா மற்றும் பிற இடங்களில் இருந்து, ஏராளமான சுற்றுலா பயணிகள் பைக்காரா அணையை பார்வையிட்டு ரசித்து சென்றனர்.இந்நிலையில், காமராஜர் சாகர் அணை, பைக்காரா, முதுமலை, ஊசிமலை, தவளமலை, ஆகிய பகுதிகளில், இயற்கை காட்சி நிறைந்த சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் அளவுக்கு, ஆபத்துகளும் அதிகளவு உள்ளன.ஆனால், சுற்றுலா பயணிகள் அதை பற்றி கண்டு கொள்ளாமல் அணையில் அத்துமீறி குளிக்க செல்கின்றனர். இரும்பு தடுப்பை தாண்டிச் சென்று, 'செல்பி' எடுப்பது, பாறைகளில் அமர்ந்து புகைப்படம் எடுப்பது, விளையாடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.சில சுற்றுலா பயணிகள், காமராஜர் அணைப்பகுதியில் தடை செய்யப்பட்ட இடத்துக்கு சென்று விளையாடுவதால், தவறி அணைக்குள் விழவும் வாய்ப்பு உள்ளது.இதனால்,இப்பகுதியில் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.சுற்றுலா பயணிகள் சிலர் கூறுகையில்,'இப்பகுதியில் வேலி இல்லாமல் உள்ளதால், நீர் நிலைகளை பார்த்தவுடன், அங்கு செல்ல தோன்றி விடுகிறது. கவனமாக தான் விளையாடி வருகிறோம்.அறிவிப்பு பலகைகள் வைத்தால், அப்பகுதிக்கு செல்வதை தவிர்ப்போம்,' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை