பா.ஜ., சாதனை விளக்க தெருமுனை பிரசாரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., சாதனை விளக்க தெருமுனை பிரசாரம்

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊட்டி: ஊட்டியில் பா.ஜ., மாவட்ட இளைஞரணி சார்பில், மத்திய அரசின், நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் நடந்தது.ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, இளைஞரணி மாவட்ட தலைவர் அருண்குமார் தலைமை வகித்தார். இளைஞரணி கோட்ட பொறுப்பாளர் சேகர் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பிரதீப் குமார், நகர தலைவர் பிரவீன் உட்பட, பலர் பங்கேற்றனர்.பிரசாரத்தில், மத்தியில் மோடி அரசால் நான்கு ஆண்டுகளில் மக்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. முன்னதாக, மோடி அரசின் சாதனைகளை, மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்று, பொதுமக்களுக்கு எடுத்துரைக்க, பா.ஜ., இளைஞரணி திட்டமிட்டிருந்த நிலையில், மோட்டார் சைக்கிள் ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுக்கவே, சாதனை விளக்க தெருமுனைப் பிரசாரம் நடந்தது. இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் சரத்குமார் நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை