குளம் தூர் வாரியவர்களுக்கு சபாஷ்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குளம் தூர் வாரியவர்களுக்கு சபாஷ்!

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அன்னுார்: கரியாம்பாளையம் ஊராட்சியை சேர்ந்தது, சுக்ரமணிக்கவுண்டன்புதுார். இங்கு 3.75 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்த குளத்தை, டி.வி.எஸ். குழுமத்தின், ஸ்ரீனிவாசன் அறக்கட்டளையினரும், விவசாயிகளும் இணைந்து, துார் வாரும் பணியை மேற்கொண்டுள்ளனர்.குளம் முழுவதும், 2.5 அடி ஆழத்துக்கு தோண்டி, கரைகள் பலப்படுத்தப்படவுள்ளன. நீர் வழி பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன.இப்பணியில் அறக்கட்டளையின் கள இயக்குனர் பாலசுப்ரமணியம், உழவர் விவாத குழு அமைப்பாளர்கள் ரங்கசாமி, கிருஷ்ணசாமி உட்பட பலர் பங்கேற்றனர். துார் வாரும் பணியுடன், மரக்கன்றுகள் நடவும் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை