அங்கன்வாடியில் இது அபூர்வம் குழந்தைகளை தூகலப்படுத்தும்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடியில் இது அபூர்வம் குழந்தைகளை தூகலப்படுத்தும்!

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அன்னுார்: கோபிராசிபுரத்தில், 8.50 லட்சம் ரூபாயில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், அனைவரையும் கவர்ந்திழுக்கிறது.பொகலுார் ஊராட்சி, கோபிராசிபுரத்தில் செயல்பட்டு வந்த பழைய குறு அங்கன்வாடி மைய கட்டடம் இடிக்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 8.50 லட்சம் ரூபாயில், கடந்த வாரம் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.அன்னுார் வட்டாரத்தில் இதுவரை இல்லாத புதுமாதிரியாக, கண்ணை கவரும் வகையில், வண்ணமயமாக ஜொலிக்கிறது. முன்புறம், சிறுவர், சிறுமியர், குரங்கு, மரங்கள், பூக்களின் படங்கள் வரையப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு பாதை, மையத்தின் உள்ளே தரையில், வழு வழு டைல்ஸ், சுவற்றில், காய், பழம், தலைவர்கள் படங்கள், எண்கள், எழுத்துக்கள்...என, 'கலர்புல்' ஆக உள்ளது.மாற்றுத்திறனாளிகள் எளிதில் செல்லும் வகையில், சாய்வு பாதையுடன் கூடிய மேற்கத்திய முறை கழிப்பறை மற்றும், சாதாரண கழிப்பறையும் உள்ளது. மையத்தின் தோற்றம் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. இதன் திறப்பு விழா விரைவில் நடக்கவுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X