மரங்களில் ஆணியடித்து விளம்பரம் பறித்து எறிந்தது நெடுஞ்சாலைத்துறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மரங்களில் ஆணியடித்து விளம்பரம் பறித்து எறிந்தது நெடுஞ்சாலைத்துறை

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெ.நா.பாளையம்: மேட்டுப்பாளையம் ரோட்டில் மரங்களில் இருந்த பேனர்களை, நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.மேட்டுப்பாளையம் ரோட்டில் துடியலுார், வடமதுரை, ஜி.என்.,மில்ஸ்., கவுண்டம்பாளையம், வடமதுரை, தொப்பம்பட்டி மற்றும் இடையர்பாளையம், டி.வி.எஸ்., நகர், கணுவாய், தடாகம் உள்ளிட்ட பகுதிகளில், பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதே போல, உருமாண்டம்பாளையத்தில் இருந்து சரவணம்பட்டி வரை, ரோட்டோர மரங்களில் விளம்பர போர்டுகள் ஆணி அடித்து வைக்கப்பட்டிருந்தன.இது குறித்து, இயற்கை ஆர்வலர்கள், மேட்டுப்பாளையம் சாலை பாதுகாப்பு சங்க செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்டோர் நெடுஞ்சாலைத்துறையினருக்கு புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை இன்ஜினியர் புவனேஸ்வரன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகள், மரங்களில் ஆணி அடித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் போர்டுகளை அகற்றினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை