ஆதிசக்தி ஆலயத்தில் இன்று திருக்குட நன்னீராட்டு பெருவிழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆதிசக்தி ஆலயத்தில் இன்று திருக்குட நன்னீராட்டு பெருவிழா

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை: குரும்பபாளையம் ஆதிசக்தி ஆலயத்தில், இன்று துவங்கும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா, பல்வேறு நிகழ்ச்சிகளுடன் வரும், 17ம் தேதி நிறைவடைகிறது.குரும்பபாளையம் ஆதிசக்தி ஆலயம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா, சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தலைமையிலும், பேரூர் ஆதினம் இளைய பட்டம் தவத்திரு மருதாசல அடிகளார் முன்னிலையிலும், இன்று துவங்கி வரும், 17ம் தேதி வரை நடக்கிறது. இன்று மாலை, 5:00 மணிக்கு ஆதிவிநாயகர் கோவிலில் இருந்து, ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி எடுத்துச்சென்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.மாலை, 6:00 மணி முதல் திருவிளக்கு வழிபாடு, பிள்ளையார் வழிபாடு, புற்றுமண் எடுத்தல், அன்னை ஆதிசக்திக்கு முதலாம் கால வேள்வி உள்ளிட்ட, பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை காலை இரண்டாம் கால வேள்வி, மாலை மூன்றாம் கால வேள்வி, பேரொளி வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.வரும், 17ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு காப்பணிவித்தல், நான்காம் கால வேள்வி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக காலை, 6:15 மணிக்கு கோபுரம் மற்றும் மூல மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடக்கிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை