வனப்பகுதிக்கு உள்ளே சென்ற முதியவர் யானை தாக்கி காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வனப்பகுதிக்கு உள்ளே சென்ற முதியவர் யானை தாக்கி காயம்

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேட்டுப்பாளையம்: நெல்லித்துறை அருகே, காட்டு ஆண் யானை தாக்கியதில் முதியவர் காயமடைந்தார்.மேட்டுப்பாளையம் வனச்சரகம், நெல்லித்துறை வனப்பகுதி அருகேவுள்ள பூதப்பள்ளத்தை சேர்ந்தவர் சின்னான், 55. இவர் கிராமத்தின் அருகிலுள்ள வனப்பகுதிக்கு, இயற்கை உபாதை கழிக்கச் சென்றுள்ளார்.அப்போது புதர் மறைவிலிருந்த ஆண் யானை, தந்தத்தால் குத்தியதில் சின்னான் பலத்த காயம் அடைந்தார்.தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ், வனவர் ரவி மற்றும் வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று சின்னானை மீட்டனர். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து விசாரணை நடக்கிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை