கபினியில் 15 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறப்பு ; காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கபினியில் 15 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறப்பு;
காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம்

மேட்டூர் : கபினி அணையிலிருந்து, வினாடிக்கு, 15 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டதால், தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள காவிரியாற்றில், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

கபினி,15 ஆயிரம் கனஅடி,உபரிநீர் திறப்பு,காவிரி,வெள்ளப்பெருக்கு,அபாயம்


கர்நாடகாவில், காவிரி உற்பத்தியாகும், குடகு மாவட்டத்தில் பலத்த மழை பெய்வதால், நேற்று, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தொடர்மழையால், நேற்று முன்தினம், வினாடிக்கு, 22 ஆயிரத்து, 800 கனஅடியாக இருந்த, கே.ஆர்.எஸ்., அணை நீர்வரத்து, நேற்று, 28 ஆயிரத்து, 300 கன அடியாக அதிகரித்தது.

இதனால், நேற்று முன்தினம், 15 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு, நேற்று, 17 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. அணை நிரம்ப, இன்னும், 32 டி.எம்.சி., நீர் தேவை.

கர்நாடகா, கேரளா எல்லையிலுள்ள, வயநாடு நீர்பிடிப்பு பகுதியிலும், பலத்த மழை பெய்வதால், நேற்று காலை, வினாடிக்கு, 22 ஆயிரத்து, 500 கனஅடியாக இருந்த, கபினி அணைக்கான நீர்வரத்து, மாலை, 36 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. அதற்கேற்ப, நேற்று முன்தினம், 13 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு, நேற்று, 16 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. அணை நிரம்ப, இன்னும், 3 டி.எம்.சி., நீர் தேவை.

கூடுதல் நீர்வரத்தால், ஒரே நாளில் கபினி அணை நிரம்பும் அபாயம் ஏற்பட்டது. அணை பாதுகாப்பு கருதி, நேற்று மாலை, 4:00 மணிக்கு, கபினியிலிருந்து, முதல்கட்டமாக வினாடிக்கு, 15 ஆயிரம் கனஅடி உபரிநீர், காவிரியில் திறக்கப்பட்டது. இது, நேற்றிரவு மேலும் அதிகரித்தது.

Advertisement

இந்த நீர், கபினியிலிருந்து, 241 கி.மீ., உள்ள மேட்டூர் அணைக்கு, நாளை காலை வந்து சேரும். கபினியில், உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளதால், தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள காவிரியாறு மற்றும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில், வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

நேற்று, மேட்டூர் அணை நீர்மட்டம், 39.96 அடி, நீர் இருப்பு, 12.06 டி.எம்.சி., இருந்தது. வினாடிக்கு, 743 கனஅடி நீர் வந்தது. உபரிநீர் வந்தடையும்பட்சத்தில், மேட்டூர் அணை நீர்மட்டம், மளமளவென உயரும்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasamy naicken - Hamilton,பெர்முடா
16-ஜூன்-201802:55:22 IST Report Abuse

ramasamy naickenஇந்த வருடமும் அணையை தூர் வரவில்லை. சும்மா பெயருக்கு விவசாயிகளுக்கு மண் வர அனுமதி விழங்கப்பட்டது. மேலும் எந்த தடுப்பு அணையும் கட்டவில்லை. இணைப்பு கால்வாய்களும் தோண்டவில்லை. ஆட்சியாளர்களுக்கு இலவச கோழி கொடுக்கும் திட்டத்தை போடவே நேரம் பத்தவில்லை. எனவே இந்த வருடம் அணை நிரம்பினால், அதை கடலில் விட வேண்டியதுதான். அந்த நேரம் லபோ, திபோ என்று அடித்துக்கொண்டு அந்த விஷயத்தை அப்படியே மறுபடியும் மறந்து விடுவோம்.

Rate this:
senthil - chennai,இந்தியா
15-ஜூன்-201809:19:46 IST Report Abuse

senthilஎன் கணிப்பு சரியானால் 3 ஆண்டுகளுக்கு பிறகு நீர் அதிகமாக வருகிறது ..... இம்முறை ஒரு சொட்டு நீர் கூட கடலில் விடாமல் பயன்படுத்தினால் அது நம் மக்கள் பட்ட கஷ்டத்திற்கு அர்த்தம்....இல்லையேயெல் காவேரி நீர் இல்லை இல்லை என்று கூறுவதெல்லாம் .....தும்பி விட்டு வாலை பிடிக்கிற கதை ஆகிவிடும் ....

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement