பாலமலை வனப்பகுதியில் சிறுத்தை!| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலமலை வனப்பகுதியில் சிறுத்தை!

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு நடத்திய போது, சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் இருப்பதை, வனத்துறையினர் உறுதி செய்தனர்.கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வனச்சரகங்களிலும், புலிகள் கணக்கெடுப்பு ஒரே நேரத்தில் சமீபத்தில் நடந்தது. இதில், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட, பாலமலை வனப்பகுதியில் வனத்துறையினர் புலிகள் நடமாட்டம் குறித்து, அடர்ந்த வனப்பகுதி, நீர்நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். இதில், பாலமலை வனப்பகுதியில் பல இடங்களில், சிறுத்தையின் கால்தடம் பதிந்து இருந்தது.வனத்துறையினர் கூறுகையில்,'கோவை புறநகர், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் மான்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால், சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், புலி இருப்பதற்கான கால்தடம் எதுவும் கண்டறியப்படவில்லை' என்றனர்.கரடிகளின் காலடி தடம், பல இடங்களில் இருப்பதை வனத்துறையினர் பதிவு செய்தனர். கரடிகள் உண்ணும் தேன்கூடுகள் பல இடங்களில் இருப்பதால், அதை உண்டபின், விரல் நகங்களை சுத்தம் செய்ய, மரங்களின் பட்டைகளில், நகங்களை கொண்டு கீறியதற்கான அடையாளம், பல மரங்களில் காணப்பட்டதாக தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை