இ.கம்யூ, கட்சியினரையும் தொற்றிய கோஷ்டி அரசியல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இ.கம்யூ, கட்சியினரையும் தொற்றிய கோஷ்டி அரசியல்

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அன்னுார்: அன்னுார் ஒன்றியத்தில் இந்திய கம்யூ., கட்சியிலும் கோஷ்டி அரசியல் நடக்கிறது.அவிநாசி தொகுதியில், 1980 முதல் 1984 வரை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் ஆறுமுகம். அதன் பின், இருமுறை இங்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது, இ.கம்யூ., மாநில பொருளாளராக உள்ளார். அன்னுார் ஒன்றிய பொறுப்பாளராக பல ஆண்டுகள் இருந்தவர்.இ.கம்யூ., விவசாயிகள் பிரிவில், மாவட்ட தலைவராக இருப்பவர் சோமனுார் பழனிசாமி. இங்கு மில், தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளதால் கம்யூ., கட்சி கிளைகளும் உள்ளன. இதில் ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் தனியாகவும், பழனிசாமி ஆதரவாளர்கள் மற்றொரு அணியாகவும் செயல்படுகின்றனர். ஆர்ப்பாட்டம், மனு கொடுத்தல், கட்சி நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும், தனித்தனியாகதான் நடக்கிறது இவர்களின் கட்சிப்பணி.பழனிசாமி அணியினர் நோட்டீஸ் அடித்தால், ஆறுமுகம் பெயரை சிறியதாகவும், ஆறுமுகம் அணியினர் நோட்டீஸ் அடித்தால், பழனிசாமியை சிறிதாக கூட போடுவதில்லை; தவிர்த்தே விடுகின்றனர். பிற கட்சிகளின் இந்த கோஷ்டி அரசியல், கம்யூனிஸ்டுகளையும் தொற்றிக் கொண்டதுதான் ஆச்சரியம்!

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை