பா.ஜ., இளைஞரணி மாநாடு அதிகளவில் பங்கேற்க முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., இளைஞரணி மாநாடு அதிகளவில் பங்கேற்க முடிவு

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அன்னுார்: கோவையில் வரும் செப்டம்பரில் நடக்கவுள்ள, பா.ஜ., இளைஞரணி மாநில மாநாட்டில், அதிக எண்ணிக்கையில் பங்கேற்பதென, கட்சியின் இளைஞரணி ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.பா.ஜ., இளைஞரணி ஒன்றிய செயற்குழு கூட்டம், பொன்னேகவுண்டன் புதுாரில், இளைஞரணி ஒன்றிய தலைவர் ஜெயபால் தலைமையில் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் சிதம்பரம் முன்னிலை வகித்தார்.இம்மாநாட்டில் 'அன்னுார் ஒன்றியத்திலிருந்து அதிக எண்ணிக்கையில், பங்கேற்பது, 400 ஏக்கர் விவசாய நிலத்துக்கு பயன் தரும் மூலக்குரும்பபாளையம் குளத்தை துார் வாருவது, அன்னுார் ஒன்றியத்தில், பல கிராமங்களில் எரியாமல் உள்ள, 1,000க்கும் மேற்பட்ட தெரு விளக்குகளை, சரி செய்வது' உள்ளிட்ட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மத்திய அரசின் நான்கு ஆண்டு சாதனைகள் குறித்து, மக்களுக்கு விளக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட துணை தலைவர்கள் உமாசங்கர், செந்தில், ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை