பாம்பு பிடிப்பவரை தேடுது மாவட்ட நிர்வாகம்! கனமழை பாதிப்பை தடுக்க முன்னேற்பாடு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாம்பு பிடிப்பவரை தேடுது மாவட்ட நிர்வாகம்! கனமழை பாதிப்பை தடுக்க முன்னேற்பாடு

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சூலுார்: தென்மேற்கு பருவமழை வலுத்து வருவதால், உஷார் ஆகிறது மாவட்ட நிர்வாகம். சென்னை வெள்ளம் போல், அதிக பாதிப்பு ஏற்பட்டால் சமாளிக்க, முன்னேற்பாடுகள் துவங்கி விட்டன.இதற்காக சூலுாரில், இயற்கை பேரிடர் மேலாண்மை ஆலோசனை கூட்டம் நடத்திய வருவாய்த்துறை அதிகாரிகள், மரம் ஏறுபவர், பாம்பு பிடிப்பவர், நீச்சல் தெரிந்தவர்கள் குறித்த பட்டியல் சேகரிக்க அறிவுறுத்தியுள்ளனர்.தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் கனமழையால், நொய்யல் ஆற்றில், வெள்ளம் பெருக்கெடுக்க துவங்கியுள்ளது. இந்நிலையில், மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து, பாதுகாத்து கொள்ள, எவ்வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், என்பது குறித்து ஆலோசிக்க, சூலுார் தாலுகா அலுவலகத்தில் கூட்டம் நடந்தது.கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் தனலிங்கம் தலைமையில் நடந்த கூட்டத்தில், சூலுார் தாசில்தார் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், அதிகாரிகள் பேசியதாவது:சூலுார் தாலுகா பகுதியில், தாழ்வான பகுதிகள் எவை என கண்டறிந்து, தகவல் அளிக்க வேண்டும். மழை, வெள்ளம் ஏற்பட்டால், தடுப்பு நடவடிக்கையாக, சவுக்கு கட்டைகள் மற்றும் மணல் மூட்டைகளை அந்தந்த பகுதியில், தயார் நிலையில் வைக்க வேண்டும். ரேஷன் கடைகளில் இரு மாதங்களுக்கு தேவையான, அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை, இருப்பு வைத்திருக்க வேண்டும்.பாதிப்புக்கு வாய்ப்புள்ளதாக, கண்டறியப்படும் பகுதிகளின் அருகில் உள்ள சமுதாய நலக்கூடங்கள் மற்றும் பள்ளிகளை, தயார் நிலையில் வைக்க வேண்டும். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களுடன் சேர்ந்து மழை நீர் வழித்தடங்கள், பாலங்களை துார் வார வேண்டும். வெள்ள பாதிப்பு ஏற்பட்டால், மீட்பு பணியில் ஈடுபட, மரம் ஏறுவோர், பாம்பு பிடிப்போர் மற்றும் நீச்சல் தெரிந்தவர்களின் முகவரி மற்றும் போன் எண்களை சேகரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் பேசினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை