டிரைவிங் லைசென்சுடன் ஆதார் எண் இணைப்பு?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டிரைவிங் லைசென்சுடன் ஆதார் எண் இணைப்பு?

Updated : ஜூன் 15, 2018 | Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (27)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
டிரைவிங் லைசென்ஸ், ஆதார் எண், ரவிசங்கர் பிரசாத் , ஆதார், ஆதார் அட்டை,  பாஜக,  டிரைவிங் லைசென்ஸ்-ஆதார் இணைப்பு,
Driving License, Aadhaar, Ravi Shankar Prasad,  Aadhaar Card, BJP, Driving License-Aadhaar Link,

புதுடில்லி : மொபைல் போன் முதல், வங்கி கணக்கு வரை, ஆதார் எண் இணைக்கப்பட்ட நிலையில், விரைவில், 'டிரைவிங் லைசென்சுடன், ஆதாரை இணைக்கும் திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சமீபத்தில், மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ரவிசங்கர் பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: டிரைவிங் லைசென்சுடன், ஆதார் எண்ணை இணைப்பதால், போதையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பி செல்லும் வாகன ஓட்டிகளை பிடிப்பது எளிதாகும். விபத்தை ஏற்படுத்தியவர், வாகனத்தை கைவிட்டு, தலைமறைவானாலும், அதில் உள்ள விரல் ரேகை மூலம், அவரை அடையாளம் காண முடியும்.

குற்றவாளிகள் பிடிபடும்போது, தங்கள் பெயரை மாற்றிக் கூறினாலும், விரல் ரேகை மாறாது என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கு, டிரைவிங் லைசென்சுடன், ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என, மத்திய போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, டிரைவிங் லைசென்சுடன், ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கையை, மத்திய அரசு விரைவுபடுத்தியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.r.samy - theni,இந்தியா
15-ஜூன்-201821:38:39 IST Report Abuse
s.r.samy வாக்காளர் அப்டையுடன் ஆதார் எண் இனைக்கும் பணி நடந்து வருகிறது...நான் இனைத்து விட்டேன்.
Rate this:
Share this comment
Cancel
Rajan - Coimbatore,இந்தியா
15-ஜூன்-201818:50:29 IST Report Abuse
Rajan Most Welcome. இதை என்றோ செய்திருக்கவேண்டும். மத்திய அரசு இதில் எங்கும் சல்லடை ஓட்டை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படியே ... சரக்கு வாங்கும் போது ஆதார் ID வேண்டும் என்றால் என்னும் பாதுகாப்பாக இருக்கும். உயர் மட்ட அதிகாரிகள் முதல் பாமர தொழிலாளர் வரை குடித்து விட்டு பணி செய்வது (Particularly தமிழ்நாட்டில்) வழக்கமாகி விட்டது.
Rate this:
Share this comment
Cancel
Santhana Kala - Tuticorin,இந்தியா
15-ஜூன்-201817:08:53 IST Report Abuse
Santhana Kala அருமையான திட்டங்கள் என்ன போட்டாலும் எங்களுக்கு பி ஜே பி பிடிக்காது அதனால் எந்த திட்டத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தமிழ் நாட்டில் மட்டும் தான் பேசுகின்றனர் ஏன் என்று தெரியவில்லை கல்வியில் சிறந்த தமிழ் நாடு இப்படி இருப்பதை பார்த்தால் எனக்கே என்ன சொல்லனு தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel
AURPUTHAMANI - Accra,கானா
15-ஜூன்-201813:19:30 IST Report Abuse
AURPUTHAMANI சும்மா அவன் அவன் அறிவாளி மாதிரி, ஆதார் பெயர் என்றாலும் உண்மையில் அது குடி மகனின் அடையாள அட்டை ID ,அதுதான் முதலில் வந்திருக்க வேண்டும், உலகம் முழுதும் அதுதான் நடைமுறை, மற்ற நாடுகளில் ID தொலைந்து விட்டால் ஒண்ணுக்கும் கூட போக முடியாது. நமக்கு தலைகீழ் எல்லாம் வந்து அப்புறம் ID முறை. அதனால் அத்துடன் அனைத்தையும் வோட்டர் ID யையும் இணைப்பதுதான் முறை. கொஞ்ச நாளில் முன்னேறிய நாடுகளை போல ஓட்டுநர் உரிமம்,ID அனைத்துக்கும் இது இரண்டும் போதும். இணைக்க மறுத்தால் உன்னிடம் எதையோ வில்லங்கம் இருக்கிறது.எதோ அரசுக்கு தெரியாமல் பண்ண பார்க்கிறாய்.அவளவுதான் சிம்பிள்.சும்மா கதை சொல்ல வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
15-ஜூன்-201812:24:41 IST Report Abuse
Loganathan Kuttuva வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைத்து வாக்கு பதிவு செய்யும் முறையை கொண்டு வரலாம்.
Rate this:
Share this comment
Cancel
Kailash - Chennai,இந்தியா
15-ஜூன்-201812:09:42 IST Report Abuse
Kailash அது ஏன்டா வாக்காளர் அட்டையோடு மட்டும் ஆதாரை கட்டாயமாக இணைக்க மறுக்கிறீர்கள் உங்களுக்கு கிடைக்கும் ஒட்டு குறைந்துவிடும் ஓட்டு இயந்திரத்தில் இருக்கும் ஓட்டைகளை வெளிப்படுத்திவிடும் என்றா?
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
15-ஜூன்-201810:33:06 IST Report Abuse
Cheran Perumal அதை எதிர்த்துதானே இங்கே போராட்டங்கள் நடக்கின்றன. தவறு செய்பவர்கள் 25 சதவீதம் தான் என்றால் மற்றவர்கள் இதை வரவேற்பார்கள். இங்கே தவறு செய்பவர்கள் 75 சதவீதம் பேர். தங்கள் தவறுகள் வெளியாகிவிடக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருப்பார்கள்.
Rate this:
Share this comment
Kailash - Chennai,இந்தியா
15-ஜூன்-201811:58:41 IST Report Abuse
Kailash//சேரன் பெருமாள்// உன் சம்பளம் பாண் கார்டு விபரத்தை வெளிப்படுத்தலாமே... தகவல்கள் முக்கியமானவை ஆதார் வைத்து என்ன வங்கிக்கணக்கில் வைத்துள்ளார்கள் அவர்கள் நிலவரம் என்ன என்று இன்னொரு வங்கி துறையில் உள்ளவர்கள் தெரிந்துகொள்ளமுடியும் என் விபரம் என் networth அரசுக்கு தெரியலாம் கண்டவனுக்கு எதற்கு தெரியவேண்டும்? எதற்கு அடுத்தவர்களுக்கு தெரியவேண்டும் மோடியின் ஆதார் விபரம் வெளிப்படையாக அறிவிப்பாரா?...
Rate this:
Share this comment
Cancel
Kailash - Chennai,இந்தியா
15-ஜூன்-201809:35:46 IST Report Abuse
Kailash ஆதார் இருந்தால் தப்ப முடியாதா? நீரவ் மோடி போல காணாமல் போய்விட்டால் ஆதார் எண்ணை வைத்து பிடித்துவிடமுடியுமா?
Rate this:
Share this comment
Cancel
Madan - Chennai  ( Posted via: Dinamalar Windows App )
15-ஜூன்-201808:46:17 IST Report Abuse
Madan இணைக்க முடியாது ....
Rate this:
Share this comment
Cancel
Kailash - Chennai,இந்தியா
15-ஜூன்-201808:44:22 IST Report Abuse
Kailash அது ஏன் வாக்காளர் அட்டையோடு மட்டும் ஆதாரை கட்டாயமாக இணைக்க மறுக்கிறீர்கள் உங்களுக்கு கிடைக்கும் ஒட்டு குறைந்துவிடும் ஓட்டு இயந்திரத்தில் இருக்கும் ஓட்டைகளை வெளிப்படுத்திவிடும் என்றா? சமீபத்தில் காங் அரசு மஹாராஷ்டிராவில் போலி வாக்காளர்கள் 80 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்று செய்தி வந்ததே... போலி வாக்காளர்களை ஒழித்தால் 2019 தேர்தலுக்கு முன் இதை அமல்படுத்தி போலிகளை ஒழித்து உண்மையான வாக்காளர்கள் அளிக்கும் ஓட்டுக்கள் பெற்ற உண்மையாக பாஜக வெற்றி என்று 2019 கூறலாமே... நேர்மையாளர்கள் இதைத்தான் முதலில் கொண்டுவந்திருப்பார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை