நடைமுறைக்கு வராத 25 சதவீத ஊதிய உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நடைமுறைக்கு வராத 25 சதவீத ஊதிய உயர்வு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கோவை: பாரதியார் பல்கலை, 'சிண்டிகேட்'சார்பில், தற்காலிக பணியாளர்களுக்கு, 25 சதவீத ஊதிய உயர்வுக்கான ஒப்புதல் அளித்தும், நடைமுறைப்படுத்தாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.பாரதியார் பல்கலையில் கடந்த, மே 18ம் தேதி உயர்கல்வித்துறை செயலர் தலைமையில் 'சிண்டிகேட்' கூட்டம் நடந்தது. இதில், தொலைதுார கல்வி மைய விரிவாக்கம், முதல்வர்கள் வயது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதில், குறிப்பாக, பல்கலையில் பல ஆண்டுகளாக தினக்கூலி முறையில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு, 25 சதவீத ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தினக்கூலி, தொகுப்பூதியம் உட்பட தற்காலிக பிரிவின் கீழ் பல்கலையில், 400 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பல ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. தற்சமயம், குறைந்தபட்சம், 350 ரூபாயும், அதிகபட்சமாக, 750 ரூபாயும் நாள் ஒன்றுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது.இந்நிலையில், 25 சதவீத ஊதிய உயர்வு அறிவிப்பு பணியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், ஊதிய உயர்வுக்கான செயல்பாடுகள் இதுவரை துவக்கப்படாமல் பல்கலை நிர்வாகத்தால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இது பணியாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.'சிண்டிகேட்' உறுப்பினர் ஒருவர் கூறுகையில், 'அடிப்படை பணியாளர்களுக்கு, 25 சதவீத ஊதிய உயர்வுக்கு கடந்த, 'சிண்டிகேட்' கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், இதற்கான பணிகள், காரணங்கள் கூறாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. கலெக்டர் அலுவலகம் உட்பட பிற அரசு அலுவலகங்களில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களின் ஊதியத்தை ஒப்பிடும் பொழுது, பல்கலை பணியாளர்களின் ஊதியம் குறைவாக உள்ளது. எதிர்வரும், 'சிண்டிகேட்' கூட்டத்தில் இதுகுறித்து, விவாதிக்க உள்ளோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X