வீட்டில் புகுந்த லாரி காப்பாற்றிய ஆட்டு உரல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டில் புகுந்த லாரி காப்பாற்றிய ஆட்டு உரல்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காரைக்குடி, காரைக்குடி வ.சூரக்குடி நான்குவழிச்சாலை அருகே வசிப்பவர் அழகு,63. இவர் மனைவி காளியம்மாவுடன் நேற்று முன்தினம் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். இரவு 2:00 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரிலிருந்து காரைக்குடி வழியாக திருமயம் சென்ற டிரைலர் லாரி நான்குவழிச்சாலை சென்டர் மீடியனை தாண்டி வீட்டின் மீது மோதியது. திடுக்கிட்டு எழுந்த அழகு தன் வீட்டின் மீது லாரி மோதியதை பார்த்து அலறினார். லாரி டிரைவர் சுரேஷ்குமார்,38, துாங்கிய நிலையில் இருந்துள்ளார்.செட்டிநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.அழகு கூறும்போது: வீட்டின் பக்கவாட்டில் உள்ள ஆட்டு உரல் லாரி டயரின் அடியில் சிக்கியதால், லாரி மேற்கொண்டு செல்ல முடியாமல் சுவரின் மீது மோதி நின்றுள்ளது. ஆட்டு உரல் இல்லையென்றால் வீட்டுடன் சேர்ந்து நாங்களும் ஆபத்தில் சிக்கியிருப்போம். லாரி டிரைவர் துாக்கத்தில் வீட்டின் மீது மோதி விட்டார். வீட்டின் உள்பகுதி அஸ்திவாரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது, என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை