பரிதாபத்தில் பயணிகள் நிழற்குடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பரிதாபத்தில் பயணிகள் நிழற்குடை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேவகோட்டை, தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் பாண்டனி கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாண்டனியில் உள்ள நிழற்குடையை கோட்டவயல்,பாண்டனி, கல்லங்குடி உள்ளிட்ட கிராம மக்கள் தேவகோட்டை, கல்லல்,வேலாயுதபட்டினம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லபயணிகள் பயன்படுத்துகின்றனர். காலையில் பள்ளி செல்லும் மாணவர்கள் இங்கு நின்று தான் பஸ் ஏறிச் செல்ல வேண்டும். இந்த நிழற்குடை கட்டி பல வருடங்கள் ஆன நிலையில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து கட்டடம் விழும் நிலையில் உள்ளது. தற்போது கோடை மழை பெய்து வருகிறது. மழையினால்கட்டடம் இடிந்து விழுவதற்குள் நிழற்குடையை சரி செய்ய வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X