குரங்குகள் அட்டகாசம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குரங்குகள் அட்டகாசம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


சிவகங்கை, சிவகங்கை அருகே குரங்குகள் அட்டகாசத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.நாட்டரசன்கோட்டையில் 5 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இப்பகுதியை சுற்றிலும் வனப்பகுதி இருப்பதால் ஏராளமான குரங்குகள் அடிக்கடி ஊருக்குள் வருகின்றன. அவை வீட்டிற்குள் புகுந்து பொருட்களை சேதப்படுகின்றன. ஓடுகளை உடைக்கின்றன. தெருக்களில் நடமாடும் குழந்தைகளை விரட்டி கடிக்கின்றன. தோட்டங்களில் வாழை, பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.சமூக ஆர்வலர் செல்வம் கூறியதாவது: ஊருக்குள் 60 குரங்குகள் திரிகின்றன. இவை தெருக்களில் கூட்டமாக நடமாடுவதால் குழந்தைகள், பெண்கள் அச்சப்படுகின்றனர். மேலும் தெரு நாய்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது. இரண்டு வாரங்களில் 5 க்கும் மேற்பட்டோரை நாய் கடித்தது. நாய், குரங்குகளை கட்டுப்படுத்த வேண்டும், என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை