சூரிய மின் சக்தி நிலையம் வரும் 25ல் துவக்க திட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சூரிய மின் சக்தி நிலையம் வரும் 25ல் துவக்க திட்டம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோவை: கோவையில் இரு இடங்களில் தலா ஒரு மெகாவாட் சூரிய மின் சக்தி நிலையம் அமைக்கும் திட்டம், வரும், 25ல் துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.மத்திய, மாநில அரசுகளின் நிதி மற்றும் மாநகராட்சி பங்களிப்பை சேர்த்து, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவையில் பல்வேறு பணிகள் செய்யப்பட உள்ளன. ரூ.11.55 கோடியில், உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகம் மற்றும் கவுண்டம்பாளையம் குப்பை கிடங்கு வளாகத்தில், தலா ஒரு மெகாவாட் திறனுள்ள சூரிய மின் சக்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இறுதிக்கட்ட வேலைகள் துரிதகதியில் நடந்து வருகின்றன.ஒப்பந்த நிறுவனங்களை இறுதி செய்ததும், உக்கடம் பெரிய குளம், வாலாங்குளத்தில் ரூ.87.88 கோடிக்கு பணிகள், ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோட்டில் மாதிரி சாலை அமைக்கும் வேலை துவங்கப்பட உள்ளன.'ஸ்மார்ட் ஸ்கூல்' திட்டத்துக்கு, நிதித்துறை அனுமதி கிடைத்தால், டெண்டர் கோருவதற்கு, கோப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, ரேஸ்கோர்ஸ், டி.வி., சாமி ரோட்டில் 'மாதிரி சாலை' அமைப்பதற்கான திட்ட அறிக்கை முடியும் தருவாயில் உள்ளது.'ஸ்மார்ட் சிட்டி' நிறுவனம் துவக்கப்பட்டு, வரும், 25ல் மூன்றாம் ஆண்டு நிறைவடைகிறது. அன்றைய தினம் டில்லியில், பிரதமர் மோடி தலைமையில் விழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அப்போது, கோவை மாநகராட்சி சார்பில், இரு இடங்களில், தலா ஒரு மெகாவாட் திறனுள்ள சூரிய மின் சக்தி நிலையங்கள் திறப்பது; குளங்கள் மேம்பாடு மற்றும் 'மாதிரி சாலை' பணியை துவக்கி வைக்க ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை