சிட்டி க்ரைம் செய்திகள்...| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிட்டி க்ரைம் செய்திகள்...

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

'பான்மசாலா' விற்றவர்கள் கைதுபெரியகடைவீதி, வெரைட்டி ஹால் ரோடு, சிங்காநல்லுார் போலீசார் தங்கள் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில், தடை செய்யப்பட்ட 'பான்மசாலா' பொருட்களை விற்பனை செய்த, சதாசிவம், 54, பரத், 22, பாலமுருகன், 24, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 'ஹான்ஸ்' உள்ளிட்ட 'பான்மசாலா' பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.மது விற்றவர்கள் கைதுமதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம் மாநகரின் பல்வேறு இடங்களில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த, மணிமுத்து, 40, பழனி, 23, கணேஷ், 24, ராமு, 38, சிதம்பரம், 51, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.விரக்தியில் தற்கொலைசிங்காநல்லுார், கோதாரி நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம், 41. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக, மனைவி குழந்தையுடன் அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால், மனமுடைந்து மது பழக்கத்துக்கு அடிமையான பாலசுப்ரமணியம் விரக்தியில் நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை