கிரேன் மோதியதில் ஜோதிடர் உயிரிழப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிரேன் மோதியதில் ஜோதிடர் உயிரிழப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வடவள்ளி: வடவள்ளியில் முதியவர் மீது கிரேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.வடவள்ளி ஜே.ஜே.நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 65; ஜோதிடர். இவர் நேற்று முன்தினம் மாலை வடவள்ளி - இடையர்பாளையம் சாலையில் வடவள்ளி நோக்கி சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.அப்போது, மருதமலை சாலையில், பவானி கூட்டுக்குடிநீருக்கு குழாய் பதிக்கும் பணிகளை முடித்துவிட்டு, கிரேனை குணசீலன் ஓட்டி வந்தார். கிரேன் அருகே வந்தபோது, ராஜேந்திரன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில், ராஜேந்திரன் மீது கிரேன் ஏறியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, வடவள்ளி போலீசார் குணசீலன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை