குளங்களை தொடர்ந்து கண்காணிக்க குழு, 'ஸ்மார்ட் சிட்டி'யில் அமைக்க முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குளங்களை தொடர்ந்து கண்காணிக்க குழு, 'ஸ்மார்ட் சிட்டி'யில் அமைக்க முடிவு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோவை: கோவையில் உள்ள குளங்களை தொடர்ந்து கண்காணிக்க, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் சிறப்பு குழு அமைக்க, முடிவு செய்யப்பட்டது.கோவை நொய்யல் வழித்தடத்தில், 24 குளங்கள் அமைந்திருக்கின்றன. இதில், நகரப்பகுதியில் உள்ள, 8 குளங்கள் மட்டும், நீண்ட நாள் குத்தகை அடிப்படையில், மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், நீர் மேலாண்மையும், மற்ற குளங்கள் பராமரிப்பும் பொதுப்பணித்துறையிடமே இருக்கின்றன.தொடர் மழையால், தற்போது நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. குளங்களில் நீர் நிரப்பும் வேலையை பொதுப்பணித்துறை மேற்கொள்கிறது. குளங்கள் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக, மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசிக்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். துணை கமிஷனர் காந்திமதி முன்னிலை வகித்தார். மாநகராட்சி அதிகாரிகள், 'ராக்', சிறுதுளி, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் பங்கேற்றனர்.நீர் நிலைகளை பாதுகாக்க என்னென்ன மேம்பாட்டு பணிகள் செய்ய வேண்டுமென, தன்னார்வலர்கள் வலியுறுத்தினர். 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், எட்டு குளங்கள் மற்றும் இணைப்பு கால்வாய்களை மேம்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.கிருஷ்ணாம்பதி குளத்தில் இருந்து தான், கழிவு நீர் குளத்தில் சேகரமாகிறது. சுத்திகரித்து நீரை தேக்குவதற்கான வசதி மற்றும் நடைபாதை, சைக்கிள் பாதை, பூங்கா உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். நகர்ப்பகுதியில் உள்ள குளங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு உருவாகாத வகையில், கரை மீட்கப்பட்டு, பலப்படுத்தி, சுற்றிலும், பாதுகாப்பு வேலி அமைக்கப்படும். டெண்டர் கோரியுள்ள ஒப்பந்த நிறுவனங்கள் சமர்ப்பித்த ஆவணங்களை மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. அடுத்த மாதம் பணியை துவக்க வாய்ப்பு இருப்பதாக, கமிஷனர் உறுதியளித்தார்.'ஸ்மார்ட் சிட்டி' திட்ட செயல்பாடு தொடர்பாக, மாதம் ஒரு முறை ஆலோசிப்பது போல், குளங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்படும். இதற்காக, சிறப்பு குழு உருவாக்கப்படும் என, உத்தரவிட்டார். குளங்கள் மேம்பாடு, நீர் நிலைகளில் உள்ள சிக்கல், எந்தெந்த பகுதிகளில் அடைப்பு இருக்கிறது என்பது தொடர்பாக, அக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X