'உழவே தலை 2.0' கருத்தரங்கம் வரும் 23ம் தேதி நடக்கிறது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'உழவே தலை 2.0' கருத்தரங்கம் வரும் 23ம் தேதி நடக்கிறது

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோவை: கோவை தொழில் வர்த்தக சபை (ஐ.சி.சி.ஐ.,) சார்பில், 'உழவே தலை 2.0' என்ற தலைப்பிலான ஒருநாள் கருத்தரங்கம், நவ இந்தியாவில் இருக்கும் இந்துஸ்தான் கலை அரங்கில், வரும் 23ம் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில், ஐ.சி.சி.ஐ., தலைவர் வனிதா மோகன் கூறியதாவது:இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்களுக்கு, அதன் யுக்திகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கில், கடந்தாண்டு, 'உழவே தலை' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால், இந்தாண்டு பல புதிய அம்சங்களோடு, 'உழவே தலை 2.0' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்துகிறோம்.வரும் 23ம் தேதி காலை 9:00 முதல் 5:30 மணி வரை இந்துஸ்தான் கலை அரங்கில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. மண் வளம், நீர் மேலாண்மை, ஒருங்கிணைந்த வேளாண்மை, சந்தைப்படுத்துதல், பயிர் பாதுகாப்பு மற்றும் பூச்சி தாக்குதல்ஆகிய தலைப்புகளில் முன்னோடி இயற்கை விவசாயிகள் பேசுகிறார்கள். நிகழ்ச்சியை சித்த மருத்துவர் சிவராமன் தொகுத்து வழங்குகிறார்.நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இதுவரையில், 450 பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள். 750 நபர்கள் வரையில் கலந்துகொள்வார்கள் என, எதிர்பார்க்கிறோம். தொழில் வர்த்தக சபையின் இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். கட்டணம் 900 ரூபாய் மட்டுமே. மதிய உணவு, கருத்தரங்கில் பேசப்படும் விஷயங்கள் தொடர்பாக தொகுப்பு புத்தகம், ஜி.எஸ்.டி., அனைத்தும் சேர்த்துதான் இந்த கட்டணம். இவ்வாறு, அவர் கூறினார். கருத்தரங்க தலைவர் துரைராஜ், ஆலோசகர் மணிசுந்தர், ஒருங்கிணைப்பாளர் பிரதீப், ஐ.சி.சி.ஐ., கவுரவ செயலாளர் நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை