காற்றலையில் அரங்கேறிய நாடகங்கள்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காற்றலையில் அரங்கேறிய நாடகங்கள்!

Added : ஜூன் 15, 2018
Advertisement

இந்த உலகத்துக்கு வானொலி அறிமுகமான போது, வானுலகில் இருந்து தேவ துாதர்கள் பேசுவதாகவும், பாடுவதாகவும் மக்கள் வியந்து போனார்கள். கனவான்கள் முதல் கடைக்கோடி மனிதர்கள் வரை, சென்றடைந்த முதல் விஞ்ஞான சாதனம் வானொலி மட்டும்தான்.தகவல் தொடர்புக்கு மட்டுமின்றி, மக்களுக்கான பொழுது போக்கு சாதனமாகவும் வானொலி விளங்கியது. இதில் ஒலிபரப்பான பாடல்கள், திரைப்பட ஒலிச்சித்திரங்கள், நாடகங்கள் என, பல நிகழ்ச்சிகள் கோடிக்கணக்கான மக்களின் காதுகளில் ஒலித்தன. இன்றைக்கு, தொலைக்காட்சி, இணையம் என, நவீன தொழில்நுட்ப ஊடகங்கள் வளர்ந்திருந்தாலும், வானொலி கேட்டு மகிழும் நேயர்கள் குறைவதில்லை.முதல் நுால்...கோவை வானொலி நிலையத்தின் இயக்குனராக இருந்து ஓய்வு பெற்றவர் எழுத்தாளர் ஸ்டாலின். உலகின் உன்னத இலக்கியங்கள் என, போற்றப்பட்ட கிரேக்க நாடகங்களை தமிழில் பெயர்த்து நுாலாக்கியவர். இப்போது உலகின் முதல் காவியமான 'கில்காமிஸ்' நுாலை, தமிழில் மொழிபெயர்த்து முடித்திருக்கிறார். இவர் எழுதிய கதை, கவிதை, நாடகங்கள் என, 25க்கும் மேற்பட்ட நுால்கள் வெளிவந்துள்ளன.இவர் வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த போது, வானொலிக்காக பல நாடகங்களை எழுதி, வானொலி நாடகமாக தயாரித்து ஒலிபரப்பினார். இப்போது தமிழக வானொலி நிலையங்களில் ஒலிபரப்பான தமிழ் நாடகங்களை ஆய்வு செய்து, அதை நுாலாக ஆவணப்படுத்தி இருக்கிறார். இது வானொலி தமிழ் நாடகங்கள் குறித்து எழுதப்பட்ட முதல் நுாலாகும்.கோவை ராமநாதபுரம் ஒலிம்பஸ் பகுதியில் வசித்து வரும் அவரை சந்தித்த போது, காற்றலையில் அரங்கேறிய நாடகங்களின் கதையை சொன்னார்.அதிலிருந்து...வரலாற்று ஆவணம்இத்தாலிய விஞ்ஞானி மார்க்கோனி கண்டுபிடித்த மகத்தான மக்கள் தொடர்பு சாதனம் வானொலி. கம்பி இல்லாத தந்தியாக விளங்கிய இந்த கருவி, பின்னர் வானொலி என, அழைக்கப்பட்டது. முதல் முறையாக முதல் உலகப்போரில் படைகளுக்கு உத்தரவு பிறப்பிக்க இதைப் பயன்படுத்தினர். 1920ல், மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. வானொலி மக்கள் தொடர்பு சாதனமாக மாறிய பிறகு, செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்பு நிகழ்ச்சியோடு, இசை, நாடகம் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்பட்டன.'பிபிசி' வானொலியில் ஒலிபரப்பான நாடகங்கள் அனைத்தும், வரலாற்று ஆவணமாக தொகுக்கப்பட்டு, நுால்களாக வெளிவந்துள்ளன. சென்னை மற்றும் திருச்சியில் வானொலி நிலையங்கள் துவங்கப்பட்ட பிறகு, அதில் தமிழ் நாடகங்கள் ஒலிபரப்பாகின. வானொலி மக்களின் செவிச்செல்வமாக விளங்கிய காலத்தில், வானொலியில் ஒலிபரப்பாகும் நாடகங்களை கேட்டு ரசிக்க பல கோடி நேயர்கள் இருந்தனர்.சாகித்ய அகாடமிஇதில் ஒலிபரப்பான தமிழ் நாடகங்களை, சாகித்ய அகாடமி அமைப்பு ஆவணப்படுத்த கேட்டுக்கொண்டதால், இந்த நுாலை எழுதி இருக்கிறேன். வானொலியில் ஒலிபரப்பான நாடகங்கள், ஆயிரக்கணக்கில் உள்ளன. அவற்றில் முக்கியமான நாடகங்கள் நுால் வடிவம் பெற்றுள்ளன. நுால் வடிவில் வந்த நாடகங்களை ஆய்வு செய்து, ஆவணமாக்கியுள்ளேன்.வானொலி தமிழ் நாடகங்கள் குறித்த அரிய தகவல்களை இதில் பார்க்கலாம். பல்கலை ஆய்வு மாணவர்களுக்கு இந்த நுால் மிகவும் பயன்படும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை