ஏற்றுமதியில் 40 சதவீதம்  சிறு, குறுந்தொழில்கள் பங்களிப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏற்றுமதியில் 40 சதவீதம்  சிறு, குறுந்தொழில்கள் பங்களிப்பு 

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை: கோவை அண்ணா சிலை அருகிலுள்ள ஆத்ரா ஹாலில் நேற்று தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (டி.ஐ.ஐ.சி.,) சார்பில் சிறப்பு தொழிற்கடன் விழா மற்றும் வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.இதில், கவுதம் என்ற தொழில்முனைவோருக்கு, 70 லட்சம் ரூபாய்க்கான கடனுதவியை டி.ஐ.ஐ.சி., நிர்வாக இயக்குனர் ஆர்த்தி வழங்கி, பேசியதாவது:இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில், 8 சதவீதமும், ஏற்றுமதியில், 40 சதவீதமும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பங்களிப்பு செலுத்துகின்றன. நாடு முழுவதும் சுமார் 36 லட்சம் சிறுகுறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவை 80 லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கி வருகின்றன. மொத்தத்தில் இந்திய தொழில்துறையின் முதுகெலும்பாக, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்களே திகழ்கின்றன. இத்தகைய தொழில் பிரிவினருக்கு உதவும் வகையில் இந்தியாவிலேயே முதன்முதலில் துவங்கப்பட்டது தான், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம்.வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரான கோவையில் திறமையான பல தொழில்முனைவோர் உள்ளனர். முதலீடு, விரிவாக்கம், தொழில்நுட்ப மேம்பாட்டில் சிறு, குறுந்தொழில் முனைவோர் கவனம் செலுத்தவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை