சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோவை: சிறுவாணி அணை பகுதியில், 120 மி.மீ., அடிவாரத்தில், 44 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு, கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள சிறுவாணி அணையில் நீர் எடுக்கப்பட்டு, சப்ளை செய்யப்படுகிறது.தினமும், 8 கோடி லிட்டர் எடுக்கப்பட்டதால், கடந்த ஏப்., - மே மாதங்களில், அணை நீர்மட்டம், 'மளமள'வென குறைந்தது. குடிநீர் தேவைக்கு எடுத்தது; ஆவியாகுதல்; வனவிலங்குகளின் தாகம் தீர்க்க திறந்து விடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தினமும், 11 செ.மீ., நீர்மட்டம் குறைந்தது.அதனால், தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து அதிகாரிகள் காத் திருந்தனர். யாரும் எதிர்பார்க்காத வகையில், நடப்பாண்டு கோடையில் மழை கைகொடுத்தது. அதன் மூலம் அணைக்கு ஓரளவு தண்ணீர் கிடைத்தது.மே, 28ல், பருவ மழை ஆரம்பித்தது. என்றாலும், சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதியில், 9ம் தேதிக்கு பிறகே, மழையின் அளவு அதிகரித்தது. தினமும், 100 மி.மீ.,க்கு அதிகமாக பெய்கிறது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அணை பகுதியில், 120 மி.மீ., அடிவாரத்தில், 44 மி.மீ., மழை பதிவானது. ஒரே நாளில், 2 அடி உயரத்துக்கு தண்ணீர் கிடைத்திருக்கிறது; நீர் மட்டம், 42 அடியாக அதிகரித்துள்ளது. இன்னும், 8 அடிக்கு தண்ணீர் வந்தால் போதும்; அணை நிரம்பி வழியும்.நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள அருவிகளில் நீர் வரத்து காணப்படுவதாலும், மழை தொடர்வதாலும், அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலை முகடுகளில் இருந்து, தண்ணீர் கொட்டுவது தொடர்வதால், கோவை குற்றாலத்துக்கும் நீர் வரத்து அதிகரித்திருக்கிறது; அதனால், ஆறாவது நாளாக நேற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை