குறிச்சி குளத்துக்கு நீர்வரத்து குறைவாகவுள்ளது ஏன்?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குறிச்சி குளத்துக்கு நீர்வரத்து குறைவாகவுள்ளது ஏன்?

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கோவை: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை பெய்தபோதிலும், நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும், குறிச்சி குளத்துக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. குறிச்சி குளத்துக்கான புட்டுவிக்கி மதகுகளை முழுமையாக திறக்க விடாமல், சிலர் தடுப்பதாக, குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.கடந்த இரு வாரமாக, கோவை சுற்றுப்பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. கோவை குற்றாலத்துக்கும் நீர் வரத்து அதிகரித்து இருக்கிறது. பெரியாறு, சின்னாறு, நீலியாறு உள்ளிட்ட கிளைஆறுகளில் இருந்து நீர் வரத்து காணப்படுவதால், நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.கோயமுத்துார் அணைக்கட்டில் இருந்து, புட்டுவிக்கி அணைக்கட்டுக்கு, தண்ணீர் சீறிப்பாய்கிறது. புட்டுவிக்கி அணைக்கட்டில் இருந்து குறிச்சி குளத்துக்குச் செல்ல அமைத்துள்ள மதகுகளை முழுமையாக திறக்கவில்லை. அதனால், நொய் யலில் வழிந்தோடி, அதிகப்படியான தண்ணீர் வெள்ளலுார் அணைக்கட்டுக்கு செல்கிறது.அங்குள்ள மதகு வழியாக நீர் செல்லும், ராஜவாய்க்கால் சுருங்கியுள்ளது. அருகாமையில் மலைபோல் கட்டட கழிவுகள் குவிந்து கிடப்பதால், வழித்தடம் மறிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த இரு நாட்களாக, மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் களமிறங்கி, ராஜவாய்க்காலில் உள்ள அடைப்புகளை எடுத்து வருகின்றனர். இதன் பயனாக, 15 ஆண்டுகளுக்கு பின், வெள்ளலுார் குளத்துக்கு நீர் செல்கிறது.ஆனால், புட்டுவிக்கி அணைக்கட்டில் இருந்து, குறிச்சி குளத்துக்கான வாய்க்காலில் குறைந்தளவே நீர் வருகிறது. இங்குள்ள மதகுகள் சிறிதாக திறக்கப்பட்டு உள்ளன. அதிகாரிகள் தரப்பில் விசாரித்தால், 'புட்டுவிக்கி அணைக்கட்டில், மதகுகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன. குறிச்சி குளத்துக்கு நீர் கொண்டு வருவதற்காக, ஒரு 'லஸ்கரை' நியமித்து இருக்கிறோம்' என்கின்றனர்.புட்டுவிக்கி வாய்க்காலில் குறைந்தளவே தண்ணீர் செல்கிறது. மதகுகளை, ஒன்றரை அடிக்கு இன்னும் திறக்க வாய்ப்பு இருக்கிறது; திறந்தால், குறிச்சி குளத்துக்கு இன்னும் கூடுதலாக நீர் வரத்து இருக்கும். குறிச்சி குளத்தை நிரப்பாமல், சிங்காநல்லுார், சூலுார் குளங்களுக்கு செல்லும் வகையில் நொய்யலில் திருப்பி விட்டுள்ளனர்.சிங்காநல்லுார், சூலுார் குளங்கள் ஏற்கனவே நிரம்பியுள்ளன. தற்போது கிடைக்கும் நீரால், அடுத்தடுத்த குளங்களுக்கே நீர் செல்லும். நொய்யல் வழித்தடத்தில் மற்ற குளங்களில் நீர் தேங்கியிருக்கும்; குறிச்சி குளம் மட்டும் வறண்டு காணப்படும். குறிச்சி குளக்கரையில் பசுமை பூங்கா அமைக்க, சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், நீர் தேக்க, மதகுகளை முழுமையாக திறக்க விடாமல், சிலர் தடுப்பதாக புகார் எழுந்துள்ளது. நீர் மேலாண்மையை முறையாக திட்டமிட்டு, குறிச்சி குளத்தை நிரப்பி விட்டு, மற்ற குளங்களுக்கு திருப்பி விட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CBE CTZN - Chennai,இந்தியா
15-ஜூன்-201810:49:31 IST Report Abuse
CBE CTZN அருகில் உள்ள மக்கள் தான் இந்த குளத்தை சீரமைத்தனர்.. நீங்களே சென்று அந்த மதகை திறந்து நீரை கொண்டுவாருங்கள்... உங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இயற்கை அன்னையால் வழங்கப்படுகிறது... இந்த செய்தியை வெளியிட்டதற்கு தினமலர்க்கு நன்றி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X