அமரர் ஊர்தி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமரர் ஊர்தி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை: கோவை அரசு மருத்துவமனையில், 9 அமரர் ஊர்தி வாகனங்கள், பொள்ளாச்சியில் ஒரு வாகனம் இயங்கி வருகின்றன. இதில் மொத்தம் 16 ஓட்டுனர்கள் பணியாற்றுகின்றனர். அதேபோல், தாய்சேய் நல விடுதி வாகனங்கள் (102) இரண்டு உள்ளன. இதில் பணியாற்றும் ஊழியர்கள் நேரம் காலமின்றி கூடுதல் நேரம் வேலை வாங்கப்படுவதாகவும், ஒரே வாகனத்தில் 3 சடலங்களை ஏற்றிச்செல்லுமாறு திட்ட அதிகாரிகள் நிர்ப்பந்தம் செய்வதாகவும், ஒரு லிட்டர் எரிபொருளுக்கு, 11 கி.மீ., ஓடும் வாகனத்தை, 13 கி.மீ.,கள் ஓட்டவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும் அதிருப்தி எழுந்துள்ளது.மேலும், இந்த திட்டப்பணிக்காக அரசு நிர்ணயித்த ஊதியத்தொகையை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயர்த்துவது போலக்கூறிவிட்டு, 300 கி.மீ.,க்கு மேல் வாகனம் ஓட்டினால் வழங்கப்படும் பயணப்படியை, 600 கி.மீ.,க்கு மேல் மாற்றி அமைத்தது என்று பல காரணங்களால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதனைக் கண்டித்து வரும் ஜூன் 18ம் தேதி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.அமரர் ஊர்தி ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி சுரேஷ் கூறுகையில், ''தமிழ்நாடு அரசுத்திட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள ஊதியத்தை கூட தர மறுக்கிறார்கள். எனவே, எங்கள் அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X